More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ரூ.376 கோடி மோசடி செய்த இந்தியருக்கு 20 ஆண்டு சிறை!
ரூ.376 கோடி மோசடி செய்த இந்தியருக்கு 20 ஆண்டு சிறை!
May 31
ரூ.376 கோடி மோசடி செய்த இந்தியருக்கு 20 ஆண்டு சிறை!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் நர்ஸ் பயிற்சியாளராக பணியாற்றி வந்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த திரிவிக்ரம் ரெட்டி. 39 வயதான இவர் அமெரிக்காவில் 3 ஆஸ்பத்திரிகள் நடத்தி வந்தார்.



இந்தநிலையில் ரெட்டி தனது ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததாக போலியான ஆவணங்களை தயார் செய்து அதன்மூலம் மருத்துவ மற்றும் தனியார் காப்பீட்டு நிறுவனங்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டு வந்தார்.



கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் ரெட்டி தனது ஆஸ்பத்திரிகள் மூலம் சுகாதார மோசடியில் ஈடுபட்டு வருவதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.



இதுகுறித்து ரகசியமாக விசாரணை நடத்தியதில் ரெட்டி காப்பீட்டு நிறுவனங்களை ஏமாற்றி 52 மில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் ரூ.376 கோடியே 44 லட்சத்து 72 ஆயிரம்) மோசடி செய்தது அம்பலமானது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.‌ அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.



இதில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக தொடர்ந்து அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.



இந்தநிலையில் இந்த வழக்கில் ரெட்டியின் தண்டனை விவரம் அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ரெட்டிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி அவர் மோசடி செய்த 52 மில்லியன் டாலரை காப்பீட்டு நிறுவனங்களுக்கு திரும்ப வழங்கவும் உத்தரவிட்டார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr01

 உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ண

Mar09

உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பில், பொதுமக்களையும் ரஷ்

Jan22

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதற்கு சீனா வாழ

Sep23

ஆஸ்திரேலியாவில் நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம

Jun10

மெக்சிகோ நாட்டின் மொரிலொஸ் மாகாணம் ஹர்வவசா நகரில் புத

Jul20

உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவுக்கான மண்டல

Jul19

இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும

Jun08

கனடாவில் முஸ்லிம் குட

Feb13

ரஷ்யா விரைவில் அதன் அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமிக்கும

May31

ரஷ்யப் பகுதிகளை தாக்கி அழிக்கக் கூடிய ராக்கெட் அமைப்ப

Mar17

அஸ்ட்ராஜெனேகா கொரோனா தடுப்பூசி மேற்கத்திய நாடுகளில்

Mar02

சவுதி அரேபியா அரசையும் அந்த நாட்டு மன்னர் மற்றும் இளவ

May23

ஜப்பானில் பிரதமர் மோடியிடம் இந்தி மொழியில் பேசிய சிறு

Feb01

உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றிலிருந்து ஏழரை கோ

Apr19

அமெரிக்காவில் நெப்ராஸ்கா மாகாணம் ஒமாஹா நகரில் வெஸ்ட்