More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு முதலாவது ´பத்திக் வெசாக் கூடு´ வழங்கும் நிகழ்வு!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு முதலாவது ´பத்திக் வெசாக் கூடு´ வழங்கும் நிகழ்வு!
May 23
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு முதலாவது ´பத்திக் வெசாக் கூடு´ வழங்கும் நிகழ்வு!

கொவிட் தொற்று நிலைமை காரணமாக இம்முறை வீடுகளில் இருந்தவாறு வெசாக் பண்டிகையை கொண்டாடும் பக்தர்களுக்காக பத்திக் கைத்தரி துறைகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சினால் செயற்படுத்தப்படும் வேலைத்திட்டங்களை முன்னிறுத்தி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு முதலாவது ´பத்திக் வெசாக் கூடு´ வழங்கும் நிகழ்வு கடந்த (21) ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்றது.



பத்திக் கைத்தரி துறைகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர அவர்களினால் பிரதமருக்கு இந்த பத்திக் வெசாக் கூடு வழங்கி வைக்கப்பட்டது.



வீடுகளில் இருந்தவாறு வெசாக் கொண்டாட்டங்களில் ஈடுபடும் பக்தர்களுக்காக தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக வெசாக் அலங்கார நிர்மாணங்களை கண்டு களிப்பதற்கு வாய்ப்பளிப்பது பத்திக் வெசாக் வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.



வெசாக் அலங்காரங்களை புதுமையான மற்றும் உள்ளூர் தோற்றத்திற்கு ஏற்ப தேசிய வடிவமைப்பு மையம் நிறைவுசெய்துள்ள இந்த படைப்பு இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் எண்ணக்கருவாகும்.



தேசிய மூலப்பொருட்கள் மற்றும் கலாசார மரபுகளை மேம்படுத்தி பத்திக் வடிவமைப்புகளுக்கு ஒரு புதிய போக்கை உருவாக்குவதற்காக இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.



வீடுகளில் இருந்தவாறு வெசாக் கொண்டாட்டங்களில் ஈடுபடும் பௌத்த பக்தர்களுக்காக மேற்கொள்ளப்பட்ட இந்த படைப்பு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் பாராட்டப்பட்டது.



குறித்த சந்தர்ப்பத்தில் பத்திக் கைத்தரி துறைகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் மற்றும் தேசிய வடிவமைப்பு மையத்தின் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May02

 

பாரிய மருந்து தட்டுப்பாடு காரணமாக தனியார் வைத

May25

மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை

Mar29

பெல்மடுல்ல பிரதேசத்தில் உள்ள கிரிதிஎல அணைக்கட்டில் இ

Oct05

முஸ்லிம்களுக்கும் பிற சகோதர மதத்தினருக்கும் இடையே உற

Jul18

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பு பெளத்த

Apr10

மித்தெனிய காரியமடித்த வைத்தியசாலையில் கடமையாற்றும்

Feb15

புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் வசிக்க

Feb18

இலங்கை பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சியொ

Feb07

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்

Jan30

காலிங்கன் யுகத்தில் நாட்டின் வரலாற்று பாரம்பரியம் சீ

Jul25

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக

Oct05

முப்பெரும் தேவியரும் ஒன்றிணைந்து ஆதிசக்தியாகக் காட்

Apr07

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தட்டுக

Jan12

 ஜேர்மன் போர்க்கப்பலான “பேயர்ன்” எதிர்வரும் சனிக

Mar28

பொன்னாலை சந்தியில், கடற்றொழிலாளர்களின் இறங்குதுறையி