நாட்டில் பயண தடை அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் மலையக பெருந்தோட்ட நகரங்களிலும் இயல்புநிலை ஸ்தம்பிதமடைந்து காணப்படுகின்றது.
நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணி முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி காலை 4 மணி வரை பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையினால் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில் மலையத்திலும் பாதுகாப்பு கடமைகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றமையை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
மேலும். குறித்த காலப்பகுதியில் மருந்தகங்களை திறப்பதற்கும் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளமையினால் நகர் பகுதிகளில் ஒரு சிலர் நடமாடுவதை காணக்கூடியதாக உள்ளது