More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • சேதனப் பசளையை பற்றாக்குறையின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை!
சேதனப் பசளையை பற்றாக்குறையின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை!
May 28
சேதனப் பசளையை பற்றாக்குறையின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை!

பெரும்போகத்திற்கு தேவையான சேதனப் பசளையை பற்றாக்குறையின்றி விவசாயிகளுக்கு வழங்குவதற்கு ஒரு முறையான திட்டத்தினூடாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.



இதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளையும் இணைத்து, விரிவான பொறிமுறை ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.



ஆரோக்கியமான உற்பத்தித்திறன்மிக்க பிரஜைகளை உருவாக்குவதற்கு நச்சுத்தன்மையற்ற உணவை பெற்றுக்கொள்வதற்கான மக்களின் உரிமை “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்டத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனை யதார்த்தமாக்குவதற்கு நாட்டின் விவசாய துறையை முழுமையாக சேதனப் பசளைக்கு மாற்றுவது ஜனாதிபதி அவர்களின் நோக்கமாகும்.



எதிர்கால தலைமுறையின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியில் விவசாயிகளுக்கு அசௌகரியங்கள் ஏற்படாத வகையில் இலக்குகளை அடைந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.



இதற்காக சேதன பசளை உற்பத்தி அளவை அதிகரிக்க வேண்டும். உற்பத்தி செய்யப்படும் பசளைகளின் அளவு குறித்து திருப்தியடையாத பட்சத்தில் உயர்தரம் வாய்ந்த சேதனப் பசளையை தேவையானளவு இறக்குமதி செய்யுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.



விவசாயத்துறை அமைச்சின் அதிகாரிகள் மற்றும் சேதனப் பசளை உற்பத்தியாளர்களுடன் அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.



சில போகங்களுக்குள் விவசாயத்துறைக்கு தேவையான சேதனப் பசளையின் அளவை நாட்டில் உற்பத்தி செய்ய முடியுமென உர உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.



இரசாயன உரத்தை இறக்குமதி செய்வதற்காக வருடாந்தம் அரசாங்கம் அதிகளவு செலவிடுகின்றது. அத்தொகையை சேதனப் பசளை உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு பயன்படுத்த முடியுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.



விவசாயத்துறை அமைச்சின் ஊடாக இந்நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கலந்துரையாடலின் போது தெரியவந்தது.



இந்த திட்டத்தை வெற்றிபெறச் செய்வதற்கு அரச வங்கிகள் குறைந்த வட்டிக்கு கடன் வசதிகளை வழங்க முன்வந்துள்ளன.



சேதனப் பசளையை பயன்படுத்துவதற்கு மாவட்ட மட்டத்தில் விவசாய ஆலோசகர்கள் மற்றும் விவசாய ஆராய்ச்சி அதிகாரிகளை தெளிவூட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.



நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் உற்பத்தி செய்யப்படும் சேதனப் பசளைகள் தேசிய உர செயலகத்தின் ஊடாக கொள்வனவு செய்வதற்கும் நெல் உட்பட வேறு பயிர்களுக்கும் ஏற்ப உரத்தினை விநியோகிப்பதற்கு தேவையான பொறிமுறை ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் சுட்டிக்காட்டினர்.



பெரும்போகத்திற்கு முன்னர் கிராமிய மட்டத்தில் மண் வளத்தை பரிசோதித்து பயன்படுத்தப்பட வேண்டிய உரத்தின் அளவு குறித்து அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May31

சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக் கொள்வனவில் அரசு பாரி

Apr03

சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடுவதற்கு மக்கள் அ

Jan20

தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கான ஒழுங்குமுறைகளை இலங

Aug04

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் வீதியோரத்தில் இருந்த

Feb23

நாளை முதல் கொழும்பு 01 – 15 வரையான பகுதிகளில் மின் வெட்ட

May01

நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வரும் ரூபாவின் பெறுமதி

Aug22

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ளத

Mar29

எரிபொருள் விலை சீர்திருத்தத்தை அடுத்து அகில இலங்கை மு

Apr01

யாழ்ப்பாணத்திற்கு வந்த பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத

May04

கொரோனா தொற்று தீவிரம் பெற்றதையடுத்து வவுனியாவில் பொத

Feb04

எதிரிப் படைகளைத் தோற்கடிப்பது போன்றே, கொரோனா – 19 தொற்

Mar13

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர் போரா

Jul25

தபால் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிக்க புதிய திட்

Jun08

நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்த

Mar27

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பெரிய