More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • அரசாங்கத்தால் மாத்திரம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது – உதய கம்மன்பில
அரசாங்கத்தால் மாத்திரம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது – உதய கம்மன்பில
May 27
அரசாங்கத்தால் மாத்திரம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது – உதய கம்மன்பில

கொவிட் வைரஸ் தாக்கத்தை அரசாங்கத்தால் மாத்திரம் தனியாக கட்டுப்படுத்த முடியாது .



வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சட்டதிட்டங்கள் விதிக்கப்பட்டாலும் அதை சரியாக பொது மக்கள் பின்பற்ற தயார் இல்லையென்றால் கொவிட் வைரஸ் தாக்கத்தை ஒழிக்க முடியாது என சக்தி வலு அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.



கொஸ்கம வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்களை கையளித்த பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



அவர் மேலும் குறிப்பிடுகையில்,



பயணக்கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ள போது வாகனங்களைப் பயன்படுத்தவேண்டாமென கூறுவதால் மக்களுக்கு சில அசௌகரியங்கள் ஏற்படும். ஆனால் தமது உயிரின் பெறுமதி ஏனையோரை விட தமக்கே தெரிந்திருக்க வேண்டும்.



எனினும் இவ்வாறானதொரு பயணக் கட்டுப்பாடு தளர்வுகளை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி தொற்றை மேலும் பரவச் செய்யும் வகையில் மிகவும் சொற்பமான பொறுப்பற்ற மக்கள் செயற்படுவதாலேயே சில கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடுகின்றது.



இது ஏனைய மக்களுக்கும் சிக்கல்களை ஏற்படுத்துகின்றது. அந்த பொறுப்பற்ற சொற்பமான மக்கள் ஒழுக்கத்துடன் செய்றபட்டால் ஒட்டுமொத்த மக்களும் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படுவதற்கான முழு சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்.



சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ள சினோபார்ம் தடுப்பூசிகளை செலுத்தும் முன்னுரிமைப் பட்டியலில் கிராம மட்டங்களில் உள்ள கிராம உத்தியோகத்தர்கள்,குடும்ப நல அதிகாரிகள், சமுர்த்தி அதிகாரிகள், விவசாய அதிகாரிகள் இணைத்துக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் சம்பந்தப்பட்டவர்களை அறிவுறுத்தியுள்ளார் என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar06

குருணாகல், நாரம்மல பொது நூலகத்துடன் கூடிய பிரதேச சபை க

Jan25

இவ்வருடம் உள்நாட்டு பால் உற்பத்தி 70 % ஆக அதிகரிக்கப்பட

Jan22

கட்டுநாயக்க − வலனாகொட பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒர

Mar04

இரணைதீவில் பொது மக்கள் வசிக்காத பகுதியில் மாத்திரமே க

Feb17

கம்பளை பொது சுகாதார பரிசோதகர்களினால் மூன்று தடவைகளை PCR

Oct20

சட்டவிரோத மற்றும் சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்

Feb20

விவசாயிகள் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களுக்கும், அ

May31

'' நான் ஆயிஷாவின்  அம்மாவின் நெருங்கிய உறவினர் .நான

Feb22

கம்பஹாவிலுள்ள மேலதிக வகுப்பு நிறுவனத்தின் பெண்கள் கழ

Sep22

புகையிரத திணைக்களத்தில் ஊழியர்களுக்கு பற்றாக்குறை ந

Sep19

யாழ்ப்பாணம்இ நவாலி பகுதியில் இளைஞன் ஒருவர் மீது சரமார

Aug13

நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன்

Sep24

 

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினால் முன்னா

Apr20

கொச்சி கடற்பரப்பில், இலங்கை படகொன்றிலிருந்து சுமார

Feb04

இலங்கையர்களின் இன்றைய நிலையில் உள்ளங்களில் பற்றி எரி