More forecasts: 30 day weather Orlando

சிறப்பு பார்வை

  • All News
  • தடுப்பூசி போட்டவங்க இறந்திடுவாங்களா? வைரலாகும் பகீர் தகவல்
தடுப்பூசி போட்டவங்க இறந்திடுவாங்களா? வைரலாகும் பகீர் தகவல்
May 26
தடுப்பூசி போட்டவங்க இறந்திடுவாங்களா? வைரலாகும் பகீர் தகவல்

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகத்தீவிரம் அடைந்துள்ளது. கொரோனா ஒருபக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், மறுபுறம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தும் தகவல்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பரப்பப்படுகின்றன.



பிரெஞ்சு நாட்டை சேர்ந்த நோயியல் வல்லுநர் மற்றும் நோபல் பரிசு வென்றவருமான லூக் மாண்டேக்னியர் கூறியதாக பகீர் தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதன்படி கொரோனாவுக்கான தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இரண்டே ஆண்டுகளில் உயிரிழந்திடுவார்கள் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.



வைரல் பதிவுகளுடன் லூக் நேர்காணல் வீடியோவும் இடம்பெற்று இருக்கிறது. வீடியோவில் லூக் பெருந்தொற்று காலக்கட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் முறையை பற்றி கேள்வி எழுப்புகிறார். "கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் தான் உருமாறிய கொரோனாவை உருவாக்குகிறார்கள், பெருந்தொற்று காலக்கில் தடுப்பூசி போடுவது நினைத்து பார்க்க முடியாத தவறு.



உலகம் முழுக்க கொரோனா தடுப்பூசி போட துவங்கியபின் உருமாறிய கொரோனா தீவிரம் அடைவதும், பெருந்தொற்று அதிகமாவது, மரணங்கள் கூடுவதும் நடக்கிறது. நோயியல் வல்லுநர்கள் தெரிந்தும் அமைதி காக்கிறார்கள். ஆனால் வரலாற்றில் இது பதிவாகும்," என அவர் கூறுகிறார். 



இந்த வீடியோ, "தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இரண்டு ஆண்டுகளில் உயிரிழந்து விடுவார்கள். நோபல் பரிசு வென்ற லூக் மாண்டேக்னியர் இதனை உறுதிப்படுத்தி இருக்கிறார். அதிர வைக்கும் நேர்காணலில், உலகின் முன்னணி நோயியல் வல்லுநர் இவ்வாறு கூறியிருக்கிறார். இனியும் நம்பிக்கையில்லை." எனும் தலைப்பில் பகிரப்பட்டு வருகிறது.



வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், பெருந்தொற்று காலக்கட்டத்தில் தடுப்பூசி செலுத்தும் முறையை லூக் மாண்டேக்னியர் கேள்வி எழுப்புகிறார். மேலும் இது மருத்துவ பிழை என குறிப்பிடுகிறார். எனினும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இரண்டு ஆண்டுகளில் உயிரிழந்து விடுவார்கள் என அவர் கூறவே இல்லை. 



போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar06

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுாரில் ஓவிய ஆசிர

Feb11

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்த்த தமிழ் இளைஞ

Mar09

வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தவிர வேறொன்றுமில்லை என்ற

Mar05

இன்டெல் கார்ப்பரேஷன், ஹெச் பி நிறுவனம், ஆப்பிள் மற்றும

Feb04

இலங்கையின் சுதந்திர தினத்திற்கு அமெரிக்க ராஜாங்கச் ச

Feb22

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் ஜுலி ஜே.சன்ங் (Julie J.Sung)

Feb21

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் துலான்

Jan19

அம்பாறை திருக்கோவிலை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பி

Mar01

சிறிய கம்பியால் செய்யப்பட்ட ஹூக்கு எனப்படும் சேப்டி ப

Jan29

சர்வதேச சந்தை முதல், இந்திய சந்தை வரையில் தங்கத்தின் வ

Feb14

வியாழன் கோள் மேற்பரப்பின் புதிய புகைப்படங்களை நாசா வெ

Feb11

இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்

Jan27

 இலங்கையிலுள்ள அழகுக்கலை நிபுணர்கள் 500 பேருக்கு லண்ட

Feb11

பாராசிட்டமால் மாத்திரையை தினமும் பயன்படுத்தினால் இர

Jan24

கிரிக்கட் வீரர் விராட் கோலியின் மகளின் வீடியோ ஒன்று