வெசாக் தினத்தில் கள்ளு வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை இன்று (26) 24 லீற்றர் கள்ளுடன் கைது செய்துள்ள சம்பவம் அம்பாறை திருக்கோவில் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய விநாயகபுரம் பிரதேசத்தில் சம்பவதினமான இன்று திருக்கோவில் காவல் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.எஸ. சமந்த தலைமையிலான காவல்துறையினர் குறித்த வீட்டை முற்றுகையிட்டனர்
இதன்போது கள்ளு வியாபாரத்தில் ஈடுபட்ட 41 வயதுடைய பெண் ஒருவரை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 24 லீற்றர் கள்ளை மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்