More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • அந்த படத்தை எப்படி முடிக்கப் போறேன்னு தெரியல - ‘வலிமை’ தயாரிப்பாளர் போனிகபூர் வருத்தம்!
அந்த படத்தை எப்படி முடிக்கப் போறேன்னு தெரியல - ‘வலிமை’ தயாரிப்பாளர் போனிகபூர் வருத்தம்!
May 25
அந்த படத்தை எப்படி முடிக்கப் போறேன்னு தெரியல - ‘வலிமை’ தயாரிப்பாளர் போனிகபூர் வருத்தம்!

இந்தியில் போனிகபூர் தயாரிப்பில், அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மைதான்’. இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. நடிகர் அஜய் தேவ்கான், சையத் அப்துல் ரஹீமாக நடிக்கிறார். இந்தியில் தயாராகும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்பட உள்ளது.



மைதான் படத்துக்காக ரூ.2 கோடி செலவில் மும்பையில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட கால்பந்து மைதான செட் ஒன்று சமீபத்தில் வீசிய டவ்தே புயலில் சிக்கி முழுவதுமாக சேதமடைந்தது. இதனால் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ள தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: “மைதான் படத்தை நினைத்தாலே எனக்கு மன அழுத்தம், வேதனைதான் வருகிறது. இந்தப் படத்தை எப்படி முடிக்கப் போகிறேன் என்று தெரியவில்லை. அதைப் பற்றி நினைத்தாலே எனக்கு அழுகை தான் வருகிறது. 



படத்தின் பட்ஜெட் நான் எதிர்பார்த்ததைவிட அதிகரித்துக் கொண்டே போவதால் எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆறுதல் தரும் விஷயம் ஒன்றே ஒன்றுதான். அதிர்ஷ்டவசமாக அந்த செட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மீண்டும் புதிதாக செட் போட வேண்டும் என்றால் அதற்கு கோடிக்கணக்கில் செலவாகும்” என போனிகபூர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep19

கல்கியின் புகழ் பெற்ற 'பொன்னியின் செல்வன்' நாவலை அட

Sep08

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விரை

Feb06

தமிழ் சினிமாவின் மாபெரும் உச்ச நட்சத்திரம் நடிகர் விஜ

Jun23

நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கு

Mar15

டி.இமான் தற்போது கோலிவுட்டில் அதிகம் பிஸியான இசையமைப்

May31

பாக்கியலட்சுமி தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓட

Jul13

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல்

Mar06

நடிகை துனிஷா சர்மா கடந்த ஆண்டு படப்பிடிப்பு தளத்தில்

Feb22

நடிகர் அஜித் எப்போதும் தனக்கு என்ன பிடிக்குமோ அதை யார

Mar07

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து கலக்கி

May03

கமலின் விக்ரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹா

Jun07

இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா த

Apr27

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் மகள் சாரா

May03

நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் காமெடியனாக இருந்து தனக

Mar14

எஸ்.ஏ. சந்திரசேகருக்கும், அவரின் மகன் முன்னணி நடிகர் வி