More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • சென்னையில் ஊரடங்கு விதிமீறல் : இத்தனை பேர் மீது வழக்குப்பதிவா?
சென்னையில் ஊரடங்கு விதிமீறல் : இத்தனை பேர் மீது வழக்குப்பதிவா?
May 15
சென்னையில் ஊரடங்கு விதிமீறல் : இத்தனை பேர் மீது வழக்குப்பதிவா?

தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்தது. அதன்படி சென்னையில் சட்டம் ஒழுங்கு காவல் துறையினர் 200 இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல் போக்குவரத்து காவல்துறையினர் 118 இடங்களிலும் தணிக்கை மேற்கொண்டனர்.



அதன்படி நேற்று தேவையின்றி வெளியேறியதாக ஆயிரத்து 110 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அத்துடன் இது தொடர்பாக 169 இருசக்கர வாகனங்கள், 6 ஆட்டோக்கள் மற்றும் 11 இலகு ரக வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.



அதேபோல் சட்டம் ஒழுங்கு பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் 641 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் 969 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது முக கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 1,346 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதேபோல் தனிமனித இடைவெளியை கடைப் பிடிக்கவில்லை என்ற குற்றத்திற்காக 83 வழக்குகளும் , குறிப்பிட்ட நேரத்தை தாண்டி கடைகளை திறந்து வைப்பதற்காக 64 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது.



சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறி பலரும் பைக்குகளில் சுற்றித் திரிந்ததால் இன்றுமுதல் ட்ரோன்கள் மூலம் ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep16

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண

Oct09

திமுக தலைவராக தேர்வான மு.க.ஸ்டாலினுக்கு திமுக நிர்வாக

Apr01

பெருந்தோட்ட சமூகத்துக்கு முகவரிகளை பதிவு செய்யுமாறு

Jul09

சர்வதேச அளவிலான சாலை விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்

Jul14

கொரோனா இரண்டாம் அலையின் கோரதாண்டவத்தை நாட்டு மக்கள் ய

Jan30

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினம் இன்று

Jun15