More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • இந்தியாவுக்கு 40 லட்சம் கொரோனா பரிசோதனை கருவி!
இந்தியாவுக்கு 40 லட்சம் கொரோனா பரிசோதனை கருவி!
May 15
இந்தியாவுக்கு 40 லட்சம் கொரோனா பரிசோதனை கருவி!

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமடைந்து வருகிறது.



மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 43 ஆயிரத்து 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,40,46,809 ஆக அதிகரித்துள்ளது.



அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 4,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2,62,317 ஆக உயர்ந்துள்ளது.



கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 3,44,776 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.  இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,00,79,599 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 37,04,893 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



இதற்கிடையே, கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள இந்தியாவுக்கு உலக நாடுகள் மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன. மேலும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்தியாவுடன் துணை நிற்பதாக  உலகின் பல்வேறு நாடுகளும் தெரிவித்து வருகின்றன.



இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரம் இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்த்துப் போராடுவதற்காக இந்தியாவுக்கு 40 லட்சம் கொரோனா பரிசோதனை கருவிகள், 3 லட்சம் பல்ஸ் ஆக்சி மீட்டர்கள் (ஆக்சிஜன் அளவிடும் கருவி), 300 வெண்டிலேட்டர்கள் உள்பட பல்வேறு மருத்துவ உபகரணங்களை நியூயார்க் நகர நிர்வாகம் அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளதாக நியூயார்க் நகர மேயர் பில் டி ப்ளசியோவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan27

தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் உத்தரவினை மீறியமைக்காக

Jan20

அமீரகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் கடும

Feb19

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாக

Feb25

குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி (வயது 48)

Aug15

ஆப்கானிஸ்தானில் வன்முறையால் தலிபான்கள் அதிகாரத்தைக்

Sep01

ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள்  கைப்ப

Mar25

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு மாதத்தை கடந்தது

Apr04

அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில

May28

உடல் நலம் மோசமடைந்து வருவதைத் தொடர்ந்து, அடுத்த அரசிய

Oct22

அடுத்த கன்சர்வேடிவ் தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கான

May20

பெருவில் 37 ஆண்டுகளுக்கு முன், போராளிகள் எனக் கருதி சுட

Mar05

உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 9 ஆவது நாளாக ந

Dec28

பிரித்தானியாவின் சர்ச்சைக்குரிய நபராக அழைக்கபடும் ம

Feb05

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில், பாது

Jan27

பிரேசில் நாட்டில் பேருந்தொன்று மலைக்குன்றில் இருந்த