More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டோர் மாஸ்க் அணிய வேண்டியதில்லை!
அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டோர் மாஸ்க் அணிய வேண்டியதில்லை!
May 14
அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டோர் மாஸ்க் அணிய வேண்டியதில்லை!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடம் வகிக்கும்  நாடு அமெரிக்கா.



கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசி போடும் பணியும் அந்நாட்டில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனால் சமீப காலமாக அங்கு நோய்த்தொற்று பரவல் குறைந்து வருகிறது.



கொரோனா பரவல் உச்சத்திலிருந்த சமயத்தில் மாஸ்க் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் மாஸ்க் அணிவதில் அங்கு புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.



தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் கூட்டமான இடங்களில் செல்ல நேர்ந்தால் மாஸ்க் அணிவது கட்டாயம் என்றும், தியேட்டர்கள் போன்ற உள் அரங்கு கூடத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேர்ந்தால் கூட்டம் இல்லாவிட்டாலும் மாஸ்க் அணிய பரிந்துரைப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



இந்நிலையில், கொரோனா தடுப்பூசியை முழுமையாக எடுத்துக் கொண்டவர்கள் இனி மாஸ்க் அணிய தேவையில்லை என அமெரிக்கா நோய்க்கட்டுப்பாட்டு தடுப்பு அமைப்பு அறிவித்துள்ளது.



இதுதொடர்பாக நோய்க்கட்டுப்பாட்டு தடுப்பு அமைப்பின் இயக்குனர் ரோச்சல் வேலன்ஸ்கி கூறியதாவது:



முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட எவரும் மாஸ்க் அணியாமல் உட்புற மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளில் பங்கேற்கலாம். தனி மனித இடைவெளியை பின்பற்றவும் தேவையில்லை. இது உற்சாகமான மற்றும் சக்திவாய்ந்த தருணம்.



இதன்மூலம் நாம் அனைவரும் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோர் மாஸ்க் அணியாமல்  இருப்பதற்கு முன் தங்கள் மருத்துவர்களுடன் ஆலோசிக்க வேண்டும்.



கொரோனா வைரஸ் கணிக்க முடியாதது என்பதை கடந்த ஆண்டு நமக்குக் காட்டியுள்ளது. எனவே விஷயங்கள் மோசமாகும் நிலையில் இந்த பரிந்துரைகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May28

ட்விட்டர் நிறுவனத்தை 4400 கோடி டொலருக்கு வாங்குவதாக ஒப்

Mar08

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கொல்லப்பட்டாலும் கூட அடுத

Jun17

இரும்புத்திரை நாடாக உள்ள வடகொரியாவில் என்ன நடக்கிறது

Jul27

வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் கொரோனா வைரஸ் பாதிப்ப

May28

உலகை இன்றளவும் கதிகலங்க வைத்துவரும் கொரோனா வைரஸ், 2019-ம்

Jul24
Mar07

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து ரஷ்ய

Feb28

சீனா உக்ரைன் - ரஷ்ய போரை முன்மாதிரியாகக் கொண்டு தற்போத

Mar23

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அடிக்கடி நடந

Jan27

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வேலையின்மை வீதம் நவம்பர் ம

Mar22

பாகிஸ்தான் சிந்து மாகாணத்தில் உள்ள சுக்குர் ரோகி என்ற

Mar28

ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான அனைத்து விமான சே

Mar09

உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடர்ந்து 13

Mar23

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை நிறுத்துவது தொடர்பாக பாக

Sep18

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய