தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் கடந்த 7-ந்தேதி பதவியேற்றுக்கொண்டார். அன்றிலிருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார். இதையடுத்து சேலம், திருப்பூர், கோவை உள்பட 5 மாவட்டங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து கொரோனா தடுப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்ய முடிவு செய்தார்.
அதன்படி இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் சென்றார். அங்கு அவருக்கு காவல்துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து சேலத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய புதிய சிகிச்சை மையத்தை மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருப்பூர் மாவட்டத்திற்கு செல்கிறார்.
முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.