More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • சாவகச்சேரி சந்தையில் கோழி உரிக்க கொடுத்தவர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம்!
சாவகச்சேரி சந்தையில்   கோழி உரிக்க கொடுத்தவர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம்!
May 19
சாவகச்சேரி சந்தையில் கோழி உரிக்க கொடுத்தவர்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம்!

நபர் ஒருவரிடம் கோழி உரிக்கக் கொடுத்த கட்டட ஒப்பந்தகாரர் ஒருவரும்,ஆசிரியர் ஒருவரும் 3500ரூபாய் பெறுமதியிலான இரண்டு சேவல்களை இழந்து ஏமாற்றத்துடன் திரும்பிய சம்பவம் ஒன்று



சாவகச்சேரி பொதுச்சந்தை வளாகத்திற்குள் அண்மையில் இடம்பெற்றுள்ளது.  



இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது சாவகச்சேரி சந்தை வளாகத்திற்குள் உள்ள கோழிக் கடைக்கு வந்த இருவர் ஆளுக்கு ஓர் சேவல் வாங்கியுள்ளனர். வாங்கிய சேவல்களை எங்கே உரிப்பது என அவர்கள் ஆராய நபர் ஒருவரை சந்தையில் நின்ற சிலர் அடையாளம் காட்டியுள்ளனர்.



குறித்த நபரும் பத்து நிமிடத்தில் உரித்த கோழிகளுடன் வருகிறேன் எனக் கூறிவிட்டு மயானப் பக்கமாக சேவல்களுடன் சென்றுள்ளார். குறித்த நபர் கோழிகளை உரிக்கும் போது அவ் வழியே வந்த பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் கண்ணில் கோழி உரிப்பது தென்பட குறித்த நபர் பாதி உரித்த கோழியுடன் துவிச்சக்கரவண்டியில் ஓடி பின்னர் துவிச்சக்கரவண்டியைக் கைவிட்டு உரித்த மற்றும் பாதி உயிருள்ள கோழிகளுடன் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றில் ஏறி தப்பித்துச் சென்றுள்ளார்.



உரித்த கோழிகளுடன் வருவார் என சுமார் மூன்று மணி நேரம் சந்தையில் காத்திருந்த நபர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது. 



சாவகச்சேரி பொதுச் சந்தையில் இறைச்சிக்காக கோழிகளை வாங்குவோர் அதனை நகரசபையின் இறைச்சிக் கடையில் கொடுத்து உரிக்க முடியுமே தவிர பொது இடங்களில் வைத்து கோழி உரிக்க முடியாது. என்ற நகரசபையின் அறிவுறுத்தல் பலகை சிறிய அளவில் இருந்ததால் தான் இவ் விபரீதம் ஏற்பட்டிருப்பதாகவும் அறிவித்தல் பலகையை மக்கள் பார்வைக்கு இலகுவான வகையில் பெரிதாக வைக்க வேண்டும் என நகரசபை உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct16

56 ஆவது கிழக்கு மாகாண பொலிஸ் தின நிகழ்வு நேற்று அம்பாறை

May03

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை

Jun08

இலங்கையில் பாதுகாப்பற்ற பாலுறவில் ஈடுபட வேண்டாம் என எ

Apr28

2021ஆம் ஆண்டிற்கான தேசிய வெசாக் பண்டிகையை கொண்டாடுவது த

May01

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து வெளிநா

Nov05

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லாவெரடுவுக்கும், இ

Oct14

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞான

Feb17

கம்பளை பொது சுகாதார பரிசோதகர்களினால் மூன்று தடவைகளை PCR

Feb03

நாட்டில் புற்றுநோயால் நாளாந்தம் சுமார் 40 பேர் உயிரிழப

Feb06

தொழில் நிமித்தம் சீஷெல்ஸ் (seashells) நாட்டிற்கு சென்று, கொரோ

Jan26

இலங்கை 5 இலட்சம் அஸ்ட்ராஜெனெகா கொவிட்-19 தடுப்பூசிகளை இ

Sep30

நாடு முழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊ

Feb06

இலங்கையில் அனைத்து அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகர

Apr01

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட

Feb09

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் அதிகரிப்பு காரணமாக