More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெளிநாடு செல்ல சவுதி அரேபியா அனுமதி!
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெளிநாடு செல்ல சவுதி அரேபியா அனுமதி!
May 19
தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெளிநாடு செல்ல சவுதி அரேபியா அனுமதி!

சவுதி அரேபியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள அந்த நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

 



சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பரவ தொடங்கிய சமயத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் நாடாக சவுதி அரேபியா இருந்தது.‌



இதனால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு அந்த நாடு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.‌



குறிப்பாக 3 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் நாட்டுக்குள் சர்வதேச பயணம் வைரஸ் பரவலை தூண்டக்கூடும் என்கிற கவலையால் சவுதி குடிமக்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அந்த நாட்டு அரசு தடை விதித்தது.



கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து அமலுக்கு வந்த இந்த தடையால் வெளிநாடுகளில் பயின்றுவரும் சவுதி அரேபியா மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.



இந்த நிலையில் சவுதி அரேபியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதுவரை 1 கோடியே 10 லட்சம் பேருக்கு குறைந்தது ஒரு தடுப்பூசியாவது போடப்பட்டு விட்டது. இதன் மூலம் அங்கு வைரஸ் பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.



இந்த நிலையில் சவுதி குடிமக்களின் சர்வதேச பயணங்களுக்கான கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.



அதன்படி தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.



அதுமட்டுமின்றி அண்மையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பயண காப்பீடு வசதியுடன் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



இதையடுத்து சவுதி அரேபியாவின் அரசு விமான நிறுவனமான சவுதியா 43 சர்வதேச இடங்கள் உள்பட 73 இடங்களுக்கு விமானங்களை இயக்க தொடங்கியுள்ளது.



அதேசமயம் அதிக ஆபத்துள்ள நாடுகளாக வரையறுக்கப்பட்டுள்ள இந்தியா, ஈரான், ஏமன், துருக்கி மற்றும் லெபனான் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.‌






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr09

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரை சேர்ந்தவர் அயன்னா வில்லிய

Mar18

உக்ரைன் - ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான நிலைமையை

May15

கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியை கைப்பற்றும் தீவிர

Jun09

இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய சவால்கள் குறித்து சீனா

Jan30

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் சமீபத்தில் பதவி ஏ

Apr29

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா 65 நாளாக சண்டையிட்டு

Feb27

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட

Mar10

உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் தனது காதலிக்கு இ

Jan19

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவுச

May22

மேற்கு ஆப்பிரிக்காவின் பல நாடுகள் மற்றும் நைஜீரியா நா

Aug28