More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • காசா, இஸ்ரேல் மோதல் விவகாரத்தில் ஐ.நா. தலையிட வேண்டும் - சீனா வலியுறுத்தல்
காசா, இஸ்ரேல் மோதல் விவகாரத்தில் ஐ.நா. தலையிட வேண்டும் - சீனா வலியுறுத்தல்
May 17
காசா, இஸ்ரேல் மோதல் விவகாரத்தில் ஐ.நா. தலையிட வேண்டும் - சீனா வலியுறுத்தல்

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவம் இடையிலான மோதல் 7-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. காசா முனை பகுதியில் உள்ள ஹமாஸ் போராளிகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்தாக்குதல் நடத்துவதும், அதற்கு பதிலடியாக ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்குவதும் தொடர் கதையாகி வருகிறது.



நேற்று காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான் தாக்குதல்களில் 26 பேர் கொல்லப்பட்டதாக காசாவில் உள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வான் தாக்குதலுக்கு பதிலடியாக ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் நகரை குறிவைத்து ராக்கெட்டுகளை வீசி எறிந்தனர்.‌



கடந்த திங்கட்கிழமை ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் ராணுவம் இடையே மோதல் தொடங்கியதில் இருந்து இப்போது வரை காசாவில் 153 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவர்களில் 39 சிறுவர்களும் 22 பெண்களும் அடங்குவர். அதேபோல் ஹமாஸ் போராளிகளின் ராக்கெட் தாக்குதல்களில் தங்கள் தரப்பில் 2 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்ததாக இஸ்ரேல் கூறுகிறது.



தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்த மோதலை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று சர்வதேச சமூகம் இருதரப்பையும் வலியுறுத்தி வருகிறது.



இந்நிலையில், இஸ்ரேல்- ஹமாஸ் இயக்கத்தினர் இடையேயான மோதலை விரைவாக முடிவுக்கு கொண்டு வர ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தலையிட வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. சர்வதேச நீதிக்கு எதிரான பக்கத்தில் அமெரிக்கா நிற்பதால் இந்த விவகாரத்தில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் உள்ளது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகம்மது குரோஷியிடம் கூறியதாக சீன அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.



இந்த விவகாரத்தில் இரு தரப்பு தீர்வுக்கு சீனா ஆதரவு அளிப்பதாகவும் இதை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct25

பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் 57ஆவது பிரத

Feb25

ஜப்பானில் அண்மை காலமாக தற்கொலைகள் தொடர்ந்து அதிகரித்

Mar05

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட

May28

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகளின் தாக்குதல் தீவிரமடைந்

Jan02

கடந்த ஆண்டு குவைத்தில் இருந்து 18,221 வெளிநாட்டவர்கள் நாட

Aug16

ஆப்கானிஸ்தானில் கடந்த சில தினங்களாக தலிபான்கள் தங்கள

Mar24

யாருடைய கண்ணுக்கும் தெரியாதபடி முற்றிலும் கண்ணாடியா

Jul19

இங்கிலாந்து சுகாதாரத் துறை மந்திரி சஜித் ஜாவித் சையது

Jun03