More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை - மோசமான விளைவுகள் ஏற்படும்
அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை - மோசமான விளைவுகள் ஏற்படும்
May 03
அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை - மோசமான விளைவுகள் ஏற்படும்

அமெரிக்கா - வட கொரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. முந்தைய அமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரியா அதிபர் கிம்ஜாங்வுடன் அணுஆயுத விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.



ஆனால் இதில் சுமூகமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இருந்தாலும் இருநாடுகள் இடையேயான மோதல் போக்கு சற்று தணிந்து இருந்தது. தற்போது அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோபைடன் வடகொரியா மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் தெரிவித்து வருகிறார்.



இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு வட கொரியா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தது. அதிபர் கிம்ஜாங் சகோதரியும், அரசின் முக்கிய பொறுப்பில் இருக்கும் கிம்யோஜாங் கூறும்போது, ‘அடுத்த 4 ஆண்டுகளுக்கு நீங்கள் (அமெரிக்கா) நிம்மதியாக தூங்க வேண்டும் என்றால் எங்களை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும்’ என்று தெரிவித்தார்.



இந்த நிலையில்கடந்த வாரம் அமெரிக்க பாராளு மன்றத்தில் அதிபர் ஜோ பைடன் தனது முதல் பேச்சை நிகழ்த்தினார். அப்போது அவர் வடகொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.



அணுஆயுத விவகாரத்தில் வடகொரியா மற்றும் ஈரான் நாடுகள் அமெரிக்காவின் தேச பாதுகாப்புக்கும், உலக பாதுகாப்புக்கும் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்று விமர்சித்தார்.



இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேச்சுக்கு வட கொரியா கடும் கண்டனம் தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வட கொரியா தரப்பில் கூறியதாவது:



சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் பாராளு மன்றத்தில் பேசும்போது, வடகொரியா அவர்களது தேச பாதுகாப்புக்கு அச்சுறுத் தலாக இருப்பதாக கூறி ஒரு பெரிய தவறை செய்து இருக்கிறார்.



விரோத கொள்கையை நிலைநிறுத்துவதற்கான தனது நோக்கத்தை அவர் வெளிப்படுத்தியன் மூலம் அமெரிக்கா மிகவும் மோச மான சூழ்நிலையை எதிர் கொள்ளும் என்று தெரிவித் துள்ளது.



இது குறித்து வடகொரியா வெளியுறவுத்துறை அதிகாரி குவான்ஜாங்கன் கூறும்போது, அரை நூற் றாண்டுகளுக்கு மேலாக அமெரிக்கா செய்ததை போல் வடகொரியா மீதான விரோத கொள்கையை தொடர்ந்து செயல்படுத்துவதற்கான ஜோபைடனின் பேச்சு தெளி வாக பிரதிபலிக்கிறது.



அமெரிக்க நாட்டின் அதிபர் ஒரு பெரிய தவறை செய்தார் என்பது உறுதி யாகி இருக்கிறது. தற்போது வட கொரியா மீதான அமெ ரிக்காவின் கொள்கையின் முக்கிய குறிப்பு தெளிவாகி விட்டதால் அதற்கான நட வடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய கட்டா யத்தில் இருக்கிறோம்.



காலப்போக்கில் அமெ ரிக்கா மிகவும் மோசமான சூழ்நிலையை சந்திக்கும்’ என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb27

நாட்டிற்குள் நுழைந்துள்ள ரஷ்ய வீரர்களை குழப்பி திசைத

Feb04

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 10 மாதங்களுக்கு பிறகு ஐக்கி

Aug26

சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பலருக்கும் வாழ்நாள்

Mar27

பிரதமர் நரேந்திர மோடி  2 நாள் பயணமாக நேற்று வங்காளதேச

Sep12

ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் பதுங்கியிருக்கும் பயங்கரவ

Mar05

விளாடிமிர் புடின் உக்ரைனில் தனது ரஷ்யப் படைகளால் நடத்

Jun14

உலகின் வளர்ந்த பொருளாதார நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்

Jan19

ஒவ்வொரு 30 செக்கன்களுக்கும்&

Oct04

இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் வால்டர் ஜெ லிண்டர் நேற்ற

Mar02

உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாம

Jun03

உலகில் முதன் முதலாக கொரோனா தொற்று சீனாவில் அறியப்பட்ட

May16

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே பல ஆண்டுகளா

Jul16

கியூபா நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலுக்கு மத்தி

Mar22

நமது அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்பு த

Sep29

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லையில் உள்ள கைபர் பக்துன்வா