More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • இந்தியாவில் அடுத்த வாரம் கொரோனா பாதிப்பு உச்சமடையும் - விஞ்ஞானிகள் குழு கணிப்பு
இந்தியாவில் அடுத்த வாரம் கொரோனா பாதிப்பு உச்சமடையும் - விஞ்ஞானிகள் குழு கணிப்பு
May 01
இந்தியாவில் அடுத்த வாரம் கொரோனா பாதிப்பு உச்சமடையும் - விஞ்ஞானிகள் குழு கணிப்பு

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகிறது. நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் 3 லட்சத்து 86 ஆயிரத்து 452 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 87 லட்சத்து 62 ஆயிரத்து 976 ஆக அதிகரித்துள்ளது.



கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 31 லட்சத்து 70 ஆயிரத்து 228 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 கோடியே 53 லட்சத்து 84 ஆயிரத்து 418 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 8 ஆயிரத்து 330 ஆக அதிகரித்துள்ளது.



இந்தியாவில் தொடர்ந்து 9-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கடுமையான முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.



இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அடுத்த வாரம் உச்சமடையும் என்று மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. மே மாதம் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை கொரோனா பாதிப்பு உச்சமடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



இது தொடர்பாக, கொரோனா வைரஸ் பரவல் குறித்து மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் விஞ்ஞானிகள் குழு தலைவர் வித்யாசாகர் கூறுகையில், இந்தியா முழுவதும் அடுத்த வாரம் (மே 3 முதல் மே 5) கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சமடையும் என்பது எங்கள் நம்பிக்கை’ என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep16

தமிழகத்தில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்

Jan20

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய

Jun20

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பாராளுமன்ற

Jul13

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 1½ ஆண்டுக்கு மேலாக பள்ள

Oct23

மிழக கவர்னராக ஆர்.என்.ரவி பதவி ஏற்ற பின் கடந்த மாதம் 23-ந

Jan02

உத்தர பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபைத் தேர்தல்

Jul03