கொரோனாவின் 2-வது அலையில் சிக்கியுள்ள இந்தியாவுக்கு ஆக்சிஜன் தயாரிப்பு அலகுகள், தடுப்பு மருந்துகள், தடுப்பூசிகள் போன்ற மருத்துவ தளவாடங்களை அனுப்பிவைத்து 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த உதவிகளை அளித்துள்ளன.
இதன் தொடர்ச்சியாக ஐ.நா.வின் பல்வேறு நிறுவனங்களும் இந்தியாவுக்கு ஏராளமான உதவிகளை அனுப்பியுள்ளன.
இந்நிலையில், யுனிசெப், உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐ.நா. மக்கள் நிதியம் இணைந்து 10 ஆயிரம் ஆக்சிஜன் செறிவூட்டிகள், 1 கோடி மருத்துவ முககவசங்கள், 15 லட்சம் முக பாதுகாப்பு கவசங்கள் ஆகியவற்றை அனுப்பி வைத்துள்ளன. இதைத்தவிர தடுப்பூசிகளை பாதுகாப்பாக சேமித்து வைப்பதற்கு தேவையான குளிரூட்டும் அலகுகளையும் யுனிசெப் வழங்கியிருக்கிறது. அத்துடன் வென்டிலேட்டர், ஆக்சிஜன் உற்பத்தி அலகுகளையும் ஐ.நா. குழு வழங்கி இருக்கிறது.