More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோரை நினைவு கூர அனுமதிக்க வேண்டும் – சிறிதரன்
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோரை நினைவு கூர அனுமதிக்க வேண்டும் – சிறிதரன்
Apr 30
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோரை நினைவு கூர அனுமதிக்க வேண்டும் – சிறிதரன்

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோரை நினைவு கூர இந்த அரசு அனுமதி வழங்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கோரிக்கை விடுத்துள்ளார் யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்



தமிழ் மக்கள் தாங்கள் இறந்து போன தங்கள் இறந்து போன உறவுகளை தங்களோடு வாழ்ந்த மக்களை தங்களுடன் சேர்ந்து இருந்த உறவுகளை கண்ணீர் சிந்தி நினைக்கின்ற மே 18 அந்த முள்ளிவாய்க்கால் நினைவு நாளை நினைவு கூர இந்த அரசு அனுமதிக்க வேண்டும்.



இந்த அரசாங்கம் அதனை தவிர்த்து விட முயன்று வருகிறது. ஆனால் அது அரசாங்கத்தினுடைய தமிழ் மக்களுக்குச் செய்கின்ற மிகப் பெரிய அநியாயமான செயல் ஒன்றாகும்.



மிக முக்கியமாக எங்களைப் பொறுத்தவரையில் ஈஸ்டர் தாக்குதலுக்கு வணக்கம் செலுத்துவதற்கு கோரிக்கை விடுக்கின்ற மதத் தலைவர்கள் சரி அல்லது இந்தத் தாக்குதலுக்காக விடுமுறை வழங்கி நாடாளுமன்றம் வரைக்கும் அஞ்சலி செலுத்துகின்ற இந்த நாட்டின் தலைவர்கள் ஒரு நியாயமான நீதியாக ஜனநாயகத்தை நேசிப்பவர்களாக இருந்தால் உண்மையை கண்டறிந்து நீதியை நிலைநாட்ட வேண்டும்.



பகிரங்கமாக தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலைக்கு மன்னிப்பு கேட்டு உயிரிழந்தோரினை நினைவு கூர்ந்து வணக்கம் செலுத்த அனுமதி வழங்குவதன் மூலமே அவர்கள் தங்களை மனிதர்களாக இந்த பூமிப்பந்தில் அடையாளப்படுத்த முடியும்.



ஆகவே இது ஒரு முக்கியமான தமிழர்களுடைய வரலாற்றில் எல்லோராலும் பார்க்கப்படுகின்ற எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு விடயம். உலகத்திலே இருபதாம் நூற்றாண்டில் 21ம் நூற்றாண்டு காலகட்டங்களில் மனிதகுலத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒரு பெரிய பேரழிவு பெரிய அனர்த்தம் அதன் நினைவு கூரலை தடுப்பது பௌத்த மதத்தை நேசிக்கின்ற புத்த பெருமானை வணங்குகின்றவர்கள் புரியும் ஒரு காரியமில்லை.



ஆகவே அரசு ஈஸ்ரர் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு நினைவு கூர எவ்வாறு அனுமதி வழங்கினார்கள் அதேபோல கடந்த காலங்களில் 2016 ல் இருந்து தமிழர்கள் இந்த வணக்கத்தை முள்ளிவாய்க்காலில் சென்று உணர்வுபூர்வமாக மேற்கொண்டார்கள் அந்த வகையில் அவர்கள் அந்த வகையில் வணக்கம் செய்வதற்கு இந்த அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr22

அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்கள் மிகவும் முக்கியமா

Oct07

வடபகுதி  மீனவ சமூகங்களிடையே அட்டைப் பண்ணை என்ற போர்வ

Feb06

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக 2020 ஆம் ஆண்டில் வெளிநாட

Apr08

நான் ஒருபோதும் பதவியிலிருந்து இராஜிநாமா செய்யமாட்டே

Sep21

விளையாட்டுத்துறை அமைச்சினால் நியமிக்கப்பட்ட கிழக்கு

May10

நாட்டில் வன்முறைகள் நீடித்தால் அதிகளவான நோயாளர்கள் வ

Jan25

தரம் 11 வகுப்புகள் மட்டுமே முதலில் இடம்பெறும்   

Oct20

ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த சம்பவத்தில் கைது செ

Aug16

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட

May24

அம்பாறை - கல்முனை வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலை

May17

காலி முகத்திடல் அமைதியின்மை சம்பவம் தொடர்பில் நாடாளு

Jan29

உருளைக்கிழங்கு என்ற போர்வையில் பாகிஸ்தானிலிருந்து

Feb04

தேசிய மின்சார கேள்வி குறைந்தளவான மட்டத்தில் காணப்பட்

Dec13

இலங்கை கடற்படையினரால் யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள

Jan26

பிரதமரின் வங்கிகணக்கிலிருந்து பலமில்லியன் ரூபாய்களை