More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • பர்கினோ பசோ நாட்டில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூடு - 18 பேர் பலி!
பர்கினோ பசோ நாட்டில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூடு - 18 பேர் பலி!
Apr 30
பர்கினோ பசோ நாட்டில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூடு - 18 பேர் பலி!

ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாடு பர்கினோ பசோ. அந்நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் போகோஹரம், ஐ.எஸ், அல் கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க ராணுவமும் போலீசாரும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.



இதனால் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த சண்டையின்போது பொதுமக்களை குறிவைத்தும் அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.



இந்நிலையில், பர்கினோ பசோவில் உள்ள ஷலீல் மாகாணம் யாடகூ கிராமத்திற்குள் நேற்று துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த கிராம மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்.



இந்த துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.



தகவலறிந்த பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால், பாதுகாப்பு படை வரும்  முன் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் அந்த கிராமத்தை விட்டு தப்பிச் சென்றுவிட்டார்.



துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஈடுபட்ட நபர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவனாக இருக்கலாம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலை தொடர்ந்து கிராம மக்கள் பலர் தங்கள் கிராமத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb09

சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சம்மேளனத்தின் (IFRC)

Mar07

அமெரிக்க போர் விமானங்களில் சீன கொடிகளை பறக்கவிட்டு ரஷ

Apr20

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெள

Aug17

ஆப்கானிஸ்தான் தலிபான்களின் வசமானதிலிருந்து பல்வேறு

Apr03

மியான்மர் நாட்டில் ஜனநாயக ஆட்சியை கடந்த பிப்ரவரி 1-ந்த

Oct01

உலகப் புகழ் பெற்றவர், அமெரிக்க ‘பாப்’ பாடகி பிரிட்ன

Oct13

அணு ஆயுத விவகாரத்தில் வடகொரியா மற்றும் அமெரிக்கா இடைய

Jun24

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை கலாசாரம் நாளுக்கு ந

Sep11

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை கலாசாரம் வளர்ந்து வ

Feb28

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக

Feb26

இந்தோனேசியாவில் மத்திய சுலவேசி மாகாணத்தில் நேற்று மு

Mar11

இந்தோனேசியா அதன் தலைநகரான ஜகார்த்தாவை கைவிட்டு, போர்ன

Jul18

சவுதி அரேபியாவில் தொழுகை நடக்கும் நேரங்களில் கடைகளை அ

Aug22

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர

Sep16

இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளராக இருந