More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • பிலிப்பைன்சில் ராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கியது - ஒருவர் பலி
பிலிப்பைன்சில் ராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கியது - ஒருவர் பலி
Apr 28
பிலிப்பைன்சில் ராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கியது - ஒருவர் பலி

பிலிப்பைன்சின் மத்திய பகுதியில் செபு மாகாணத்தின் மாக்டன் தீவில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து அந்நாட்டு விமான படைக்கு சொந்தமான ‘எம்520எம்ஜி' தாக்குதல் ரக ஹெலிகாப்டர் ஒன்று வழக்கமான பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது‌. ஹெலிகாப்டரில் விமானி உள்பட 4 பேர் இருந்தனர். இந்த ஹெலிகாப்டர் போஹோல் மாகாணத்தின் கடாபி நகருக்கு அருகே வானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.



இதனையடுத்து விமானி ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்க முயற்சித்தார். ஆனால் அவரது கட்டுக்குள் வராத ஹெலிகாப்டர் அங்குள்ள கடலில் விழுந்து நொறுங்கியது.



இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற 3 பேரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளதாக பிலிப்பைன்ஸ் ராணுவம் தெரிவித்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun01

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் நடைபெற்ற பட்டமளி

Mar02

உக்ரைன் பாதுகாப்பு துறையானது போர் தாக்குதலில் காயமடை

May24

உலகம் முழுவதும் போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கள் இருப

May25

உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சி வெற்றி பெற

Mar18

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் இன்று 23ஆவது

Sep26

அட்லாண்டிக் கடலில் உருவான சக்தி வாய்ந்த ‘பியோனா’ ப

Feb06

கொவிட்–19 நோயை உண்டாக்கும் கொரோனா வைரஸ் ஆய்வுக் கூடத்

Sep20

உக்ரைனில் தொடங்கிய போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய ஜனா

May20

மரியுபோல் இரும்பு ஆலையில் சிக்கிய நிலையில் ரஷ்ய இராணு

May18

உக்ரைனின் மரியூபோல் நகரில் அமைந்துள்ள உருக்காலைக்கு

Jan25

எதிர்க் கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியை ஆதரிக்கும் எத

Jun09

மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரச

Mar28

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட

Apr22

தற்போது பூமிக்கு மேல் சுழலும் சர்வதேச விண்வெளி ஆய்வு

Mar09

கடந்த பிப்ரவரி 24 ஆம் திகதி ரஷ்யா தனது படையெடுப்பை தொடங