More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ஓட்டோமான் கால ஆர்மேனிய படுகொலையை இனப்படுகொலையாக அறிவித்தது அமெரிக்கா!
ஓட்டோமான் கால ஆர்மேனிய படுகொலையை இனப்படுகொலையாக அறிவித்தது அமெரிக்கா!
Apr 26
ஓட்டோமான் கால ஆர்மேனிய படுகொலையை இனப்படுகொலையாக அறிவித்தது அமெரிக்கா!

ஓட்டோமான் பேரரசு என்பது துருக்கியர்களால் ஆளப்பட்ட ஒரு பேரரசு. முதல் உலகப் போர் சமயத்தில் ஓட்டோமான் பேரரசுக்கு எதிராக நாட்டில் பல புரட்சி இயக்கங்கள் உருவாகின. இதன் பின்னணியில் ஆர்மீனியார்கள் இருப்பதை கண்டு கொண்ட ஓட்டோமான் பேரரசு 1915-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந்தேதி ஆர்மீனியார்களை படுகொலை செய்யத் தொடங்கியது. 1915 - 1916-ம் ஆண்டுகளில் 15 லட்சம் ஆர்மீனியார்கள் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.



தற்போதைய ஆர்மீனியா உட்பட பல நாடுகள் இதை இனப்படுகொலை என கூறுகின்றன. ஆனால் ஓட்டோமான் பேரரசுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த தற்போதைய துருக்கி குடியரசு இதனை இனப்படுகொலை என கூறுவதை மறுக்கிறது. மேலும் 1915 - 1916-ம் ஆண்டுகளில் 3 லட்சம் ஆர்மீனியார்கள் மட்டுமே கொல்லப்பட்டதாகக் கூறி வருகிறது.



இந்த நிலையில் ஓட்டோமான் பேரரசு காலத்தில் ஆர்மீனியார்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வை இனப்படுகொலை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். ஓட்டோமான் பேரரசின் படுகொலையை இனப்படுகொலை என அறிவித்த முதல் அமெரிக்க ஜனாதிபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.‌



ஜோ பைடன் இதுகுறித்துக் கூறுகையில் ‘‘ஒட்டோமான் கால ஆர்மீனியா இனப்படுகொலையில் இறந்த அனைவரின் வாழ்க்கையையும் நாங்கள் நினைவில் கொள்கிறோம், மேலும் இதுபோன்ற ஒரு கொடுமை மீண்டும் நிகழாமல் தடுக்க நம்மை மறுபரிசீலனை செய்கிறோம். இனப்படுகொலை என அறிவிப்பதின் நோக்கம், குற்றம் சாட்டுவது அல்ல, என்ன நடந்ததோ அது மீண்டும் நிகழாமல் இருக்க உறுதி செய்வதாகும்’’ என்றார்.



இதனிடையே அமெரிக்காவின் இந்த அறிவிப்புக்கு துருக்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக துருக்கியில் உள்ள அமெரிக்க தூதரை நேரில் அழைத்து சம்மன் வழங்கியது துருக்கி அரசு.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar12

உக்ரைன் இராணுவத்திற்கு சொந்தமான ஆளில்லா விமானம் குரோ

May21

மரியுபோல் நகரில் அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்த உக்

Mar09

நேட்டோ அமைப்பில் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உ

Jul16

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக

Mar28

ரஷ்ய வீரர்கள் பலரை உக்ரைன் படையினர் பிடித்து வைத்துள்

Sep05

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள த

May22

தற்போது உலக நாடுகள் பலவற்றில் குரங்கம்மை நோய் பரவல் அ

Jul30

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, அமெரிக்காவி

Dec28

தன்னை விமர்சித்து கட்டுரை எழுதிய பெண் நிருபரை, அமெரிக

Jun09

எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக 4 ரஷ்ய நிறுவனங்களுக்

Jun10

சீனாவின் டிக்-டாக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு அமெரி

Apr03

 

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் கடந்த சில

Sep15

 ரஷ்ய அதிபர் புடினை சந்தித்தவர்களில் சிலர் கொரோனாவா

Jun10

கஞ்சாவிற்கு சட்ட அனுமதி வழங்கிய முதல் ஆசிய நாடு

May11

இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலின் மையமாக கிழக்கு ஜெருசலேம் உள