More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகளா? தலைமை செயலாளர் திடீர் ஆலோசனை!
தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகளா?  தலைமை செயலாளர் திடீர் ஆலோசனை!
Apr 15
தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகளா? தலைமை செயலாளர் திடீர் ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாளொன்றுக்கு 5 முதல் 6 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று புதிய கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை நெருங்கியது.



இவ்வாறு முதல் அலையை விட, கொரோனா இரண்டாம் அலை அதிவேகமாக பரவிக் கொண்டிருப்பதால் தமிழக சுகாதாரத்துறை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. ஒரு பக்கம் தடுப்பூசி செலுத்தும் பணியும் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.



இதனிடையே, பாதிப்புகளை கட்டுப்படுத்தும் வண்ணம் கடந்த 8ம் தேதி புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. மால்கள், தியேட்டர்கள், ஷோ ரூம்கள், கோவில்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி, வார விடுமுறைகளில் கடற்கரைகளுக்கு செல்லத் தடை, ஹோட்டல்கள் மற்றும் கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடுகள் விதிப்பு, திருமணம் மற்றும் இறுதி சடங்குகளில் குறைந்தபட்ச நபர்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த புதிய உத்தரவுகள் கடந்த 10ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்ட நிலையிலும், கொரோனா பாதிப்புகள் குறைந்ததாக இல்லை.



இந்த நிலையில், தமிழகத்தில் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நாளை ஆலோசனை நடத்தவிருக்கிறார். தினசரி கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை எட்டியிருப்பதால் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றி ஆலோசிக்க நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun30

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் 

சட்டசபையில் நடந்த தர்ணா போராட்டத்துக்கு பிறகு 

தேனி மாவட்டம் போடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மீன்

Jun11

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள்

Jul03

தமிழகத்தில் முதல்முறையாக கடலூர் மாவட்டம் பெண்ணாடம் ம

Feb08

மேற்கு வங்கத்தை வர்த்தக மையமாக மாற்ற மத்திய அரசு உறுத

May13

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இத

Oct01

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்தநாள் இன்று க

May11

அரசியல் பிரமுகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்

Apr19

சபரிமலை அய்யப்பன் கோவிலில் விஷூ மற்றும் சித்திரை மாத

Sep06

இந்தியா: அரசு மருத்துவா்களின் முதல் பதவி உயா்

May20

அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு நிதியளிப்பதற்க

Jun14

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை கடந்த சில நாட்கள

Jun17

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் சுசில் அரி இன்டர்நே&

Jun15

சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து