More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • அரசைப் பிளவடைய இடமளியேன்:சதிமுயற்சியை முறியடித்தே தீருவேன்! – மஹிந்த சூளுரை
அரசைப் பிளவடைய இடமளியேன்:சதிமுயற்சியை முறியடித்தே தீருவேன்! – மஹிந்த சூளுரை
Apr 19
அரசைப் பிளவடைய இடமளியேன்:சதிமுயற்சியை முறியடித்தே தீருவேன்! – மஹிந்த சூளுரை

அரசின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான கூட்டம் இன்று எனது தலைமையில் நடைபெறவுள்ளது. அரசுக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளுக்கு இன்று முடிவு காணப்படும்.



மக்களின் அமோக ஆணையுடன் நிறுவப்பட்ட அரசைப் பிளவடைய இடமளியேன். அரசைக் கவிழ்க்கச் சிலரால் முன்னெடுக்கப்படும் சதிமுயற்சியை முறியடித்தே தீருவேன்.என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.



ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-



ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கூட்டணி, ஒரு குடும்பமாக இயங்குகின்றது. குடும்பம் என்றால் அதற்குள் சில கருத்து வேறுபாடுகள் வரத்தான் செய்யும். அந்தக் கருத்து வேறுபாடுகளை வைத்து சிலர் அரசியல் ஆதாயம் தேட முயல்கின்றனர்.



ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பலத்தை அறியாமல் சிலர் செயற்படுகின்றனர். எமது கூட்டணி அரசை எவராலும் பிளவுபடுத்த முடியாது – என்றார்.  



அரசின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான கூட்டம்அலரி மாளிகையில் இன்று நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் தற்போதைய அரசியல் நிலவரம், கூட்டுக் கட்சிகளுக்கிடையே நிலவும் முரண்பாடுகள் மற்றும் மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளன.



குறிப்பாக, மாகாண சபைத் தேர்தல் சட்டத்தின் சில சரத்துகள் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி ஒரு நிலைப்பாட்டையும், ஏனைய கட்சிகள் வேறு நிலைப்பாட்டையும் கொண்டுள்ள காரணத்தால் அதனை அமைச்சரவையில் சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



அதேநேரத்தில், கொழும்புத் துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம், மே தினக் கூட்டம் என்பன குறித்தும் இன்று  இடம்பெறவுள்ள ஆளும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின்போது அவதானம் செலுத்தப்படவுள்ளன என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb17

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுத

Oct05

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா

Jun07

தற்போது கொவிட்-19 பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், எதிர்

Apr02

எம்மை நெருக்கடிக்குள் தள்ள சூழ்ச்சிகளை சர்வதேசம் முன

Mar23

பின்னவல மற்றும் மஹா ஓயா பிரதேசத்தில் சந்தேகத்திற்கிட

Jan28

இலங்கையின் சிறைச்சாலைகளில் ஊழல் மற்றும் முறைகேடுகளை

Feb01

வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜெயவர்தனவுக்கு கொ

Oct24

நாட்டின் 09 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாய

Apr26

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அ

Mar19

முதற்கட்டமாக ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப

Jan29


சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்ப

Jan22

நுவரெலியாவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

Jun09

மக்கள் அடித்து விரட்டினாலும், தாக்கினாலும் அனைத்தயும

Aug15

யாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் அமைக்கப்படவுள்ள நவீன

Jan25

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யலாம் என வளி மண்டலவிய