More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • அமெரிக்காவில் வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு - ஒருவர் உயிரிழப்பு
அமெரிக்காவில் வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு - ஒருவர் உயிரிழப்பு
Apr 19
அமெரிக்காவில் வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு - ஒருவர் உயிரிழப்பு

அமெரிக்காவில் நெப்ராஸ்கா மாகாணம் ஒமாஹா நகரில் வெஸ்ட்ரோட்ஸ் என்கிற பிரபலமான வணிகவளாகம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை இந்த வணிக வளாகம் வழக்கம்போல் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது.



ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது கையில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர் அங்குள்ள ஒரு கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த நபர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்.



இதனால் வணிக வளாகம் முழுவதும் பெரும் பதற்றமும் பீதியும் தொற்றிக் கொண்டது. வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களின் உயிரை காப்பாற்றிக்கொள்ள அலறியடித்தபடி அங்கும் இங்குமாக ஓட்டம் பிடித்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் ஒரு பெண் பலத்த காயமடைந்தார்.



இதனிடையே துப்பாக்கிச்சூடு குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் வணிக வளாகத்தை சுற்றி வளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் தாக்குதல் நடத்திய அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். அதனைத் தொடர்ந்து படுகாயமடைந்த அந்த பெண்ணை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.



தாக்குதல் நடத்திய மர்ம நபர் யார்? இந்த தாக்குதலின் பின்னணி என்ன? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb15

ஜிம்பாப்வே நாட்டில் ஊதிய பிரச்சினை தொடர்பாக  அரசுக்

Jun20

அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன் தனது வளர்ப்பு ப

Mar29

பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியை காண சென்ற இளம்பெண

Sep29

இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் 4ஜி பயன்படுத்த

Sep04