More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ஜனாதிபதி ஜோ பைடனுடன் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா நேரடி பேச்சுவார்த்தை!
ஜனாதிபதி ஜோ பைடனுடன் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா நேரடி பேச்சுவார்த்தை!
Apr 18
ஜனாதிபதி ஜோ பைடனுடன் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா நேரடி பேச்சுவார்த்தை!

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடனை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் 



கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.



அங்கு அவர் தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடனை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.



ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவியேற்றதற்கு பிறகு வெளிநாட்டு் தலைவர் ஒருவர் உடன் நடந்த முதல் நேருக்கு நேர் சந்திப்பு இதுவாகும்.‌



இந்த சந்திப்பின்போது இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவது குறித்தும், பிராந்திய நாடுகள் இடையிலான ஒத்துழைப்பை உறுதி செய்ய இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் அமைப்பை வலுப்படுத்துவது குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.



மேலும் கொரோனா வைரஸ், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்தும், வடகொரியா முன்வைக்கும் சவால்களை எதிர்கொள்வது பற்றியும் இருவரும் தீவிரமாக ஆலோசித்தனர். நீண்ட நேரம் நடந்த இந்த சந்திப்புக்கு பிறகு ஜோ பைடன் மற்றும் யோஷிஹைட் சுகா ஆகிய இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.



புதிய உயரங்களை எட்டியுள்ளது



அப்போது ஜோ பைடன் பேசுகையில், “இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கும், உலகுக்கும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் அடித்தளமாக எங்கள் கூட்டணி தனது பங்கை வழங்கியுள்ளது. தற்போதைய பிராந்திய நிலைமை மற்றும் கடுமையான பாதுகாப்பு சூழலின் வெளிச்சத்தில், எங்கள் கூட்டணியின் முக்கியத்துவம் புதிய உயரங்களை எட்டியுள்ளது” என்றார்.



மேலும் அவர், “ஜப்பானும், அமெரிக்காவும் உறுதியான முயற்சிகள் மூலம் பார்வையை மேம்படுத்துவதற்கு முன்னிலை வகிக்கும் என்று நாங்கள் ஒப்புக்கொண்டோம். ஆசியான், ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும், பிராந்தியங்களுக்கும் நாங்கள் ஒத்துழைப்போம்” என கூறினார்.



அதனை தொடர்ந்து யோஷிஹைட் சுகா பேசுகையில், “இந்தோ-பசிபிக் மற்றும் உலகின் அமைதி மற்றும் செழிப்பில் சீனாவின் செல்வாக்கு குறித்தும் நாங்கள் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினோம். கிழக்கு மற்றும் தென் சீன கடல்களிலும், பிராந்தியத்திலும் மற்றவர்களை அச்சுறுத்துவதன் மூலம் நிலைமையை மாற்றுவதற்கான எந்தவொரு முயற்சியையும் எதிர்க்க நாங்கள் ஒப்புக்கொண்டோம்” என தெரிவித்தார்.



மேலும் அவர், “ஒரு சுதந்திரமான, வெளிப்படையான அணுகக்கூடிய மற்றும் செழிப்பான இந்தோ-பசிபிக் எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக முன்னெப்போதும் இல்லாத வகையில் குவாட் அமைப்பை வலுவாக்கி நட்பு நாடுகள் மற்றும் கூட்டாளிகளுடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்” என்றார்.



அதேபோல், “ஜப்பானும், அமெரிக்காவும் பிராந்தியத்தில் 2 வலுவான ஜனநாயக நாடுகளாக இருக்கின்றன. மேலும் மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி உள்ளிட்ட எங்களது பகிரப்பட்ட மதிப்புகளை பாதுகாக்கவும், முன்னேறவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்று ஜோ பைடன் கூறினார்.



அதனைத் தொடர்ந்து வட கொரியா விவகாரம் குறித்து பேசிய ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா பிரச்சினைக்கு தீர்வுகாண வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னை நேரில் சந்தித்து பேச தான் தயாராக உள்ளதாக கூறினார்.



இதுபற்றி அவர் கூறுகையில், “வட கொரியாவுடன் பலனளிக்கும் உறவை ஏற்படுத்துவதற்கு எந்த வித நிபந்தனைகளும் இன்றி அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். நானே முன்னணியில் நின்று செயல்பட உறுதியாக இருக்கிறேன்” என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar23

அஜ்மான் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொ

Mar04

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அமெர

Jun23

பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ துதர்தே சர்ச்ச

Oct18

பிரித்தானிய முன்னாள் இராணுவ விமானிகள் சீன இராணுவத்தி

Mar22

மரியுபோல் நகரில் சரணடைவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை எ

Feb10

உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் பரவி

Mar15

உக்ரைனின் மரியுபோல் நகரில் அத்துமீறி நுழைந்து தாக்கு

Jan19

அமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் சென்ற மத்திய

Jul03

விமான போக்குவரத்தின் முக்கிய பகுதியாக ஐக்கிய அரபு அமீ

Feb28

ரஷியாவுடனான போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு

Mar09

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட

Jul06

அமெரிக்காவில் சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதி

Dec28

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக

May03

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவின் வடக்கு மற

Apr03

அமெரிக்காவின் பாராளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்ட