More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • கோட்டாவின் எதேச்சதிகாரத்துக்கு விரைவில் முடிவு கட்டுவோம் – சஜித் சூளுரை
கோட்டாவின் எதேச்சதிகாரத்துக்கு விரைவில் முடிவு கட்டுவோம் – சஜித் சூளுரை
Apr 17
கோட்டாவின் எதேச்சதிகாரத்துக்கு விரைவில் முடிவு கட்டுவோம் – சஜித் சூளுரை

இலங்கைக்குத் தேவை மனிதர்களைப் படுகொலை செய்யும் ஹிட்லர் பாணியிலான ஆட்சியல்ல என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.



அத்துடன் மக்களை வாழ வைக்கும் ஆட்சியே தேவை எனவும் அவர் குறிப்பிட்டார்.



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் எதேச்சதிகாரத்துக்கு விரைவில் முடிவு கட்டுவோம் எனவும் அவர் உறுதிப்படக் கூறினார்.



செல்லக்கதிர்காமம் – கரவிலே பிரதேசத்தில் 350 குடும்பங்களுக்கு அரிசியை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.



அவர் மேலும் தெரிவிக்கையில்,



நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தி போன்ற தலைவர்கள் உலகத்துக்குப் பாடம் கற்றுக் கொடுத்துள்ளனர்.



நண்பர்களே எமக்குத் தேவை மனிதர்களைப் படுகொலை செய்யும் ஹிட்லர் ஆட்சியல்ல. எமது நாட்டுக்குத் தேவை கொலை கலாசாரம் அல்ல.



நாம் தற்போது செய்ய வேண்டியது கொலைகளை அல்ல. மக்களை வாழ வைக்க வேண்டியதையே நாம் செய்ய வேண்டும்” – என்றார்.



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தேவையேற்படின் ஹிட்லராகவும் மாறுவார் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அண்மையில் வெளியிட்டிருந்த கருத்துக்குப் பதிலளிக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar16

கொழும்பு − கிரான்ட்பாஸ் − கஜீமா தோட்டத்தில் நேற்று

Mar02

வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியில் இன்று (02) காலை மருமக

Jun11

விக்டோரியா மற்றும் ரந்தெனிகல நீர்த்தேக்கங்களில் இரு

Feb04

நாட்டில் கொரோனா தொற்று இன்னும் கட்டுப்பாட்டை மீறவில்

Mar08

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்

May03

பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மகனான யோசித்த ராஜபக்சவின்

May14

கிளிநொச்சி ஏ9 வீதியில் பயன்படுத்தப்பட்ட காசோலைகள் வீச

Aug17

வவுனியா ஓமந்தை பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த நபரொர

Apr25

திருகோணமலை – குச்சவெளி – மதுரங்குடா பகுதியில் ஆண் ஒ

Jan28

கொரோனா வைரஸ் தொற்றினை மிகவும் திறம்பட கையாள்வது குறி

Oct02

 மகிந்த ராஜபக்சவே ஆட்சியை தன்வசம் வைத்து்ள்ளதாக தெர

Jun15

வவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 15 பேர் உ

Mar10

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் ரோஹித ராஜபக

May16

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த

Feb12

கொழும்பு துறைமுகத்தில் தற்போது அத்தியாவசிய பொருட்கள