More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • அதிமுகவின் கோட்டை ஸ்டாலின், உதயநிதிக்கு எடப்பாடி எச்சரிக்கை!
அதிமுகவின் கோட்டை ஸ்டாலின், உதயநிதிக்கு எடப்பாடி எச்சரிக்கை!
Apr 03
அதிமுகவின் கோட்டை ஸ்டாலின், உதயநிதிக்கு எடப்பாடி எச்சரிக்கை!

இந்த சேலம் மாவட்டத்தில் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, அவரது தங்கை கனிமொழி, தயாநிதி மாறன் என அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வந்து சென்றுவிட்டனர். சேலம் மாவட்டத்தையே சுற்றிச் சுற்றி வருகிறார்கள்.



ஆக, ஸ்டாலின்… நீங்களும் சரி உங்கள் குடும்ப உறுப்பினர்களும் சரி எத்தனை முறை வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் இது அதிமுக கோட்டை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று அடித்துச்சொன்னார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.



சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆட்டையாம்பட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசியபோது இவ்வாறு தெரிவித்தார்.



அவர் மேலும் தனது பேச்சின்போது, ‘’சேலம் மாவட்டம் என்று சொன்னாலே அம்மாவின் கோட்டை. அண்ணா திமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் 11 சட்டமன்றத் தொகுதியில் 10 சட்டமன்ற தொகுதிகளை வென்ற மாவட்டம் சேலம் மாவட்டம். அதிலும் வீரபாண்டி சட்டமன்ற தொகுதி பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் கோட்டை. இந்த கோட்டையை எஃகு கோட்டையாக இந்த தேர்தலில் நீங்கள் உருவாக்க வேண்டும்’’ என்று மக்களிடம் கேட்டுக்கொண்டார்.



பின்னர் மேலும், ‘’தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள் இருந்தாலும் முதலமைச்சர் தொகுதி எது என்றால், சேலம் மாவட்டத்தில் உள்ளது என்ற பெருமை உள்ளது. நீங்கள் அனைவருமே வேட்பாளர்கள் தான். எங்களை பொறுத்தவரையில் மக்கள் தான் முதலமைச்சர். மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பது தான் எங்களது கடமை . ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் கண்விழித்தால் போதும், நான் முதலமைச்சர் ஆகி விடுவேன் என்று கனவுலகில் மிதந்து கொண்டிருக்கிறார். அவருக்கு கனவு ஒரு போதும் பலிக்காது.



நான் அப்படி அல்ல உங்களோடு பழகியவன் இங்குள்ள மேடையில் பலமுறை பேசியவன். இந்த ஊருக்கு பலமுறை வந்துள்ளேன். இங்குள்ள கழகத் தோழர்கள் வீட்டிலேயே பலைமுறை உணவருந்தி உள்ளேன். அவர்கள் குடும்பத்தில் என்னை ஒருவனாக நினைத்தவர்கள். அப்படி பழக்கப்பட்டவன்.



யார் வேண்டுமானாலும் என்னுடைய வீட்டிற்கு வந்து உங்களது குறைகளைச் சொல்லலாம். என்னால் முடிந்ததை நான் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் திமுகவில் உள்ள தொண்டன் கூட ஸ்டாலின் வீட்டு கேட்டை கூட தொட முடியாது.



உங்கள் குடும்பத்தில் ஒருவர் முதலமைச்சர் வேட்பாளர் என்றால் எவ்வாறு மகிழ்ச்சி அடைவீர்கள். அந்த மகிழ்ச்சியோடு உங்களை வந்து சந்திக்கின்றேன். நான் எவ்வளவோ கூட்டத்திற்கு சென்றாலும் உங்களை வந்து இங்கு பார்க்கின்ற போது தான் பதவி என்பது வேறு பாசம் என்பது வேறு. உங்களையெல்லாம் பாசத்தோடு பார்க்கிறேன். நான் என்றைக்கும் முதலமைச்சர் என்ற நிலையிலிருந்து உங்களையும் பார்த்தது கிடையாது. இது தேர்தல் பிரச்சார கூட்டம் அல்ல வெற்றி விழாக் கூட்டம் போல காட்சி அளிக்கிறது’’ என்று உருக்கமாக பேசினார்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul14

அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி மித்ராவின்

Oct24

பிரதமர் மோடி ஆண்டு தோறும் எல்லையில் பாதுகாப்பு பணியில

Feb11

பர்தா தொடர்பான மேல் முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்

Jan26

டெல்லி: குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் ராஜபாதையில்

May04

உத்திர பிரதேச முதல்வராக 2-வது முறையாக பதவியேற்றுள்ள பா

Apr30

தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்க

Jan01

நாமக்கல் அருகே புத்தாண்டு விற்பனைக்காக, வீட்டில் விதி

Jul21

முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அவைத்தலைவருமான இ.மதுசூத

Sep14

தமிழகத்தின் 14-வது ஆளுநராக மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர

Jun24

பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல் கடந்த ஏழு ஆண்ட

Mar11

கேரள மாநிலம் பெரும்பாபூர் பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவி.

Jun14

மேட்டூர் அணையை திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற

Oct04

தூய்மை நகரங்களின் பட்டியலில் தமிழ்நாடு பின்தங்கியுள

Feb15

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு மத

Aug26

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட கடற்க