More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • லடாக்கில் நிலவும் தற்போதைய சாதகமான போக்கை இந்தியா ஏற்க வேண்டும் - சீன ராணுவம்
லடாக்கில் நிலவும் தற்போதைய சாதகமான போக்கை இந்தியா ஏற்க வேண்டும் - சீன ராணுவம்
Apr 12
லடாக்கில் நிலவும் தற்போதைய சாதகமான போக்கை இந்தியா ஏற்க வேண்டும் - சீன ராணுவம்

கிழக்கு லடாக்கில் பங்கோங்சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து இந்தியாவும், சீனாவும் படைகளை விலக்கியுள்ளன. அங்கு மீதமுள்ள இடங்களிலும் படைகளை திரும்பப்பெறுவது தொடர்பாக கடந்த 9-ந் தேதி இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் சந்தித்து பேசினர்.



இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடந்த இந்த 11-வது சுற்று பேச்சுவார்த்தையில் கோக்ரா, தேப்சாங், ஹாட்ஸ்பிரிங் போன்ற பகுதிகளில் இருந்தும் படைகளை திரும்பப்பெறுவது தொடர்பாக இரு தரப்பும் விரிவாக பேசியதாக இந்திய ராணுவம் பின்னர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தது.



அங்கு மேற்கொண்டு எந்த பிரச்சினைகளையும் ஏற்படுத்தாமல், தற்போதைய நிலைத்தன்மையை கூட்டாக பராமரிப்பது என்றும், நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை வேகப்படுத்த இருதரப்பும் ஒப்புக்கெண்டதாகவும் அதில் கூறியிருந்தது.



இந்த நிலையில் எல்லையில் நிலவும் தற்போதைய சாதகமான போக்கை இந்தியா ஏற்க வேண்டும் எனவும், அங்கு அமைதியை பராமரிக்க வேண்டும் எனவும் சீன ராணுவம் கூறியுள்ளது. முந்தைய பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்ட ஒருமித்த முடிவை இருதரப்பும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அந்த நாடு கூறியுள்ளது.



சமீபத்திய பேச்சுவார்த்தை தொடர்பாக சீன ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் மற்றும் முந்தைய பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்பட்ட ஒருமித்த முடிவுகளின்படி, எல்லையில் பதற்றத்தணிப்பு தொடர்பான தற்போதைய சாதகமான போக்கை இந்தியா ஏற்று, எல்லைப்பகுதிகளில் அமைதியை ஏற்படுத்தும் என நாங்கள் நம்புகிறோம். அத்துடன் எல்லையில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை பராமரிக்கும் சீனாவின் இலக்கை நோக்கி நகர்வார்கள் எனவும் எதிர்பார்க்கிறோம்’ என்று கூறப்பட்டு இருந்தது.



இருநாட்டு ராணுவத்துக்கு இடையே நடந்துள்ள 11-வது சுற்று பேச்சுவார்த்தை சுமார் 13 மணி நேரம் நீடித்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



ஏனெனில் சீன அதிகாரிகள் முன்கூட்டியே திட்டமிட்ட மனநிலையிலேயே கலந்து கொண்டதாகவும், எந்த வகையிலான நெகிழ்வுத்தன்மையையும் அவர்கள் காட்டவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar16

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையொன்றை(Intercontinental Ballistic Missile

Jan30

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பிராந்தியங்களில் நிலவ

Apr14

மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி ஜனநாயக ரீதிய

May01

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர

Sep04

இங்கிலாந்து 

ரஷ்யாவின் திட்டமிட்ட வெற்றி தின கொண்டாட்டங்களில் த

Sep06

ஆப்கானிஸ்தானின் பஞ்ஷீர் பள்ளத்தாக்கில், தாலிபான்களு

Mar05

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட

Apr11

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஏவுகணைகள் தாங்கிய போர்

Jul19

 பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதராக நிஜிபுல்லா அ

Jan17

இந்தோனேசியாவில் 2 தினங்களுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்க

Jul06

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சுலு மாகாணத்தின் ஜோலோ தீவு

Apr01

சீனாவில் உருவான கொலைகார கொரோனா வைரஸ் ஓராண்டுக்கு மேலா

Feb11

அமெரிக்காவின் எதிரி நாடுகளான ரஷ்யா, ஈரான் மற்றும் சீன

Oct04

நவம்பரில் எட்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்க