More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • தெற்காசியாவின் முதலாவது டிஸ்னிலான்ட் இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!
தெற்காசியாவின் முதலாவது டிஸ்னிலான்ட் இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!
Apr 11
தெற்காசியாவின் முதலாவது டிஸ்னிலான்ட் இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!

தெற்காசியாவின் முதலாவது டிஸ்னிலான்ட் இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



மலேசியா மற்றும் கொரியாவின் முதலீட்டுடன் கொரிய நிறுவனமான Korea Cavitation Co வினால் இதன் நிர்மாண பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.



டிஸ்னிலான்ட் அமைப்பதற்காக 150 ஏக்கர் காணியை பெற்றுக் கொள்வதற்கு இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக கொரிய நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.



பிரதானமாக கொரியா மற்றும் மலேசியா உட்பட நாடுகளிடம் இருந்து 400 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு நிதி உதவி இந்த திட்டத்திற்கு பெறுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு முன்னர் 30 வீதம் நிதி சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.



கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்ற நிலையில், தடுப்பூசி போடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதனால் இந்தியாவும் முதலீடு செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.



இந்த திட்டம் மலேசியாவின் Genting Highlands திட்டத்திற்கு சமமானதாகும். இதில் விசேட ரயில் வீதி உட்பட பல்வேறு விடயங்களை உள்ளடக்க எதிர்பார்ககப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.



சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு 300 அறைகள் கொண்ட ஹோட்டல்களையும் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan22

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள் Online ஊடா

Jan27

க.பொ.த உயர்தர 2021 பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும்

Apr27

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது

Feb03

தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஆலோசனை கோரி இலங்கை

Mar27

இந்த வருடம் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்

Mar08

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக நகல் எ

Feb06

நாட்டில் எந்த தேர்தலை நடத்தினாலும் அரசாங்கம் படுதோல்

Mar08

 நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு அ

May01

ஐக்கிய மக்கள் சக்கியினரின் ஆர்ப்பாட்ட பேரணியானது தற்

Oct07

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளம

Oct16

யாழ்ப்பாண நகர் பகுதியில் ஆயிரம் போதை மாத்திரைகள் மற்ற

Apr08

நேற்று புதன்கிழமை இரவு கிடைத்த பி.சி.ஆர். பரிசோதனை அறிக

Mar09

உலகளாவிய ரீதியில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்

Aug05

ஆசிரியர் – அதிபர் சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆ

Mar15

இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன