More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • தொழிலதிபரை மணந்த சில நாட்களில் பினாயில் குடித்து நடிகை தற்கொலை முயற்சி!
தொழிலதிபரை மணந்த சில நாட்களில் பினாயில் குடித்து நடிகை தற்கொலை முயற்சி!
Apr 10
தொழிலதிபரை மணந்த சில நாட்களில் பினாயில் குடித்து நடிகை தற்கொலை முயற்சி!

தொழிலதிபரை மணந்த சில நாட்களில் கன்னட நடிகை ஒருவர் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல சின்னத்திரை கன்னட நடிகை சைத்ரா கொட்டுரு, கடந்த சில நாட்களுக்கு முன்பு மண்டியாவைச் சேர்ந்த தொழிலதிபர் நாகார்ஜுனாவை  திருமணம் செய்து கொண்டார்.



இந்நிலையில் அவரது வீட்டில் பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அதையறிந்த குடும்பத்தினர் அவரை  மீட்டு  மருத்துவமனையில் அனுமதித்தனர்.



அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். இவ்விவகாரம்  தொடர்பாக போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். நடிகை தற்கொலைக்கு முயன்ற விவகாரம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது.



சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ‘தொழிலதிபர் நாகார்ஜுனாவும், நடிகை சைத்ராவும் திருமணம் ெசய்து கொள்ளும் முடிவானது, நாகார்ஜூனா  குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை. ஆனால், கடந்த மார்ச் 28ம் தேதி, நாகார்ஜுனாவுக்கும் சைத்ராவுக்கும் ஒரு கோயிலில் திருமணம் நடந்த  புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

இவர்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.



பையத்தராயனபுர கணபதி கோயிலில் திருமணம் செய்துகொண்ட விஷயம்  நாகார்ஜூனா குடும்பத்தினருக்கு தெரியவந்ததால், அவர்கள் கோலார் போலீசில் புகார் அளித்தனர்.



இருதரப்பையும் அழைத்து விசாரணை நடத்தி, நாகார்ஜூனா- சைத்ரா தம்பதியை ஒன்றாக அனுப்பி வைத்தோம். ஆனால், நாகார்ஜூனாவின்  குடும்பத்தினர் தம்பதிகளை வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுத்துள்ளனர். மேலும், இருவரின் திருமணம் செல்லாது என்றும், நாகார்ஜூனாவை  கட்டாயப்படுத்தி திருமணத்தை நடத்தியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.



அவர்கள் சைத்ராவுக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். ஒருகட்டத்தில் நாகார்ஜுனாவும் சைத்ரா தன்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து  கொண்டதாக தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த சைத்ரா, தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவ்விவகாரம் தொடர் பாக விசாரணை நடைபெற்று  வருகிறது’ என்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct24

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து ஆசி

Jul13

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்

Feb24

 

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 2022-23ம் கல்வ

Mar15

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில்,

Jan25

இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மர

Mar27

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான விஐபி தொகுதிகளுள் ஒன்ற

Mar01

பிரதமர் மோடிக்கும், காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி

Feb19

கேரளாவின் பாலக்காடு மாவட்டம் மலம்புழா பகுதியில் உள்ள

Apr02

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் வர

Jan28

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ

Oct03

தமிழகத்தில் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்த மெகா தடுப

Oct14

ஒடிாசா மாநிலம் மல்காங்கிரி மாவட்டம் துளசி காட்டுப்பக

Jun15

திருப்பதியில் கொரோனா ஊரடங்கால் இலவச தரிசனம் முற்றிலு

Jan11

தமிழகத்தில் எதிர்வரும் 25ஆம் திகதி வரை  சேவல் சண்டைக்