More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • இந்தோனேசியாவில் பாகிஸ்தானியர் உள்பட 13 பேருக்கு மரண தண்டனை!
இந்தோனேசியாவில் பாகிஸ்தானியர் உள்பட 13 பேருக்கு மரண தண்டனை!
Apr 09
இந்தோனேசியாவில் பாகிஸ்தானியர் உள்பட 13 பேருக்கு மரண தண்டனை!

இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் கடுமையான குற்றமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அங்கு கடந்த ஜூன் மாதம் போதைப்பொருள் கடத்தியதாக ஒரு பாகிஸ்தானியர், 3 ஈரானியர், 9 இந்தோனேசியர்கள் என 13 பேரைக்கொண்ட ஒரு கும்பல் சிக்கியது. அத்துடன் 400 கிராம் போதைப்பொருளும் (மெத்தாம்பேட்டமைன்) சிக்கியது. இவர்கள் கைது செய்யப்பட்டு, மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சுகபூமி நகர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கு விசாரணையில் அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக கருதி, 13 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.



இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு திட்டம் போட்டுக்கொடுத்த ஈரானியருக்கு, அவரது மனைவியுடன் மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தலில் ஒரே நேரத்தில் 13 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று என்று ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கூறுகிறது. தண்டிக்கப்பட்ட அனைவரும் அந்த நாட்டு வழக்கப்படி சுட்டுக்கொல்லப்படுவார்கள்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun01

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க புதிய ச

Sep06

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர

Dec20

உலகில் பொதுமக்கள் தங்களது இருப்பிடங்களை மாற்றி அமைத்

Mar03

இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் மார்க்கெல் இருவரும் கட

Jun06

அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லேடன

Aug19