More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • ஏப்.10 முதல் புதிய கட்டுப்பாடுகள்- அரசு அறிவிப்பு!
ஏப்.10 முதல் புதிய கட்டுப்பாடுகள்- அரசு அறிவிப்பு!
Apr 09
ஏப்.10 முதல் புதிய கட்டுப்பாடுகள்- அரசு அறிவிப்பு!

இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று வெகுவேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்கள் நடத்தப்பட்டன.



அந்த கூட்டங்களில் பெரும்பாலானோர் முககவசம், சமூக இடைவெளி போன்ற கொரோனா தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை. எனவே தொற்று வெகுவேகமாக பரவி, தொற்று எண்ணிக்கை மளமளவென்று உயர்ந்தது. கொரோனா பரவலுக்கு பிரசார கூட்டங்களும் காரணமாய் அமைந்தன. எனவே மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்று மக்கள் மத்தியில் பரவலாக கேள்வி எழுந்தது.



இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:



* தமிழகத்தில் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏப். 10 முதல் தடை விதிக்கப்படுகிறது.



* திருமண நிகழ்வுகளில் 100 பேர் மட்டுமே பங்கேற்கலாம்.



* தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி.



* இறுதி ஊர்வலங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்.



* பொழுது போக்கு பூங்கா, வணிக வளாகங்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி.



* கல்வி, சமுதாய, பொழுதுபோக்கு கலாச்சார நிகழ்வுகளில், உள் அரங்குகளில் 200 நபருக்கு மட்டும் அனுமதி.

 



* வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் நடைமுறை தொடரும்.



 



* அனைத்து வழிபாட்டு தலங்களிலும் இரவு 8 மணிவரை மட்டுமே அனுமதி





* சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைகளில் சில்லரை வியாபாரத்திற்கு தடை விதிப்பு.



* பேருந்து இருக்கைகளில் அமர்ந்து செல்லும் பயணிகளுக்கு மட்டுமே அனுமதி.



* உணவகங்கள் தேநீர் கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.



* ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேர்களுக்கு மட்டுமே அனுமதி.



இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar09

சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல

May31

சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து உள

Jul27

ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் முதல் முதலாக இந்தியா

May06

கொரோனா வைரசின் 2-வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வரு

Jun23

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் வீட்டில் நேற்ற

Apr18

கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணிகள் இந்தியாவ

May30

கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலையை வீழ்த்துவதற்காக நாடு

Mar23

பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கா

Feb27

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் உக்கிரம் அடைந்து வர

Mar27

துபாய் எக்ஸ்போவில் பங்கேற்க அரசு முறை பயணமாக சென்னையி

Jun02

மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் பொதுப்பணித

Aug05
Oct02

துபாயில் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி இன்று தொடங்கியது. அடு

Jun24

கொரோனா 2-வது அலையுடன், கருப்பு பூஞ்சை நோயும் நாட்டு மக்

Jan26

டெல்லி செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள், அதில் ஏ