கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 03 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 591ஆக உயர்ந்துள்ளது.
ஹோமாகம பகுதியைச் சேர்ந்த 89 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து முல்லேரியாக ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இரத்தம் விஷமானமையால் ஏற்பட்ட அதிர்ச்சி, கொரோனா தொற்று , பக்றீயாக தொற்று , சிறுநீரகம் பாதிக்கப்பட்டமை மற்றும் இதய நோய் காரணமாக 2021 ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி உயி ரிழந்துள்ளார்.
தணமல்வில பகுதியைச் சேர்ந்த 38 வயதான ஆண் ஒருவர் அம்பாந் தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்ற வந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற் றும் மாரடைப்பு காரண மாக 2021 ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி உயிரிழந் துள்ளார்.
ஹெட்டிபொல பகுதியைச் சேர்ந்த 60 வயதான பெண் ஒருவர் பேரா தனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா, சிறுநீரகம் செயலிழந் தமை, உயர் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு காரணமாக 2021 ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.