More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • 2036 வரை புடின் மட்டுமே அதிபர் புதிய உத்தரவில் கையெழுத்து!
2036 வரை புடின் மட்டுமே அதிபர் புதிய உத்தரவில் கையெழுத்து!
Apr 07
2036 வரை புடின் மட்டுமே அதிபர் புதிய உத்தரவில் கையெழுத்து!

கம்யூனிஸ்ட் நாடான ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புடின் இருந்து வருகிறார். இவருக்கு வயது 68. கடந்த 2000ம் ஆண்டில் இருந்து இவர் அதிபராக இருந்து வருகிறார். இவருடைய 3வது பதவிக் காலம் வரும் 2024ல் முடிகிறது.



இந்நிலையில், இந்த பதவிக்காலம் முடிந்த பிறகும் மேலும் 12 ஆண்டுகள் பதவியில் நீடிப்பதற்கான சட்டத்தில் நேற்று அவர் கையெழுத்திட்டார்.



இதன்மூலம், வரும் 2036ம் ஆண்டு வரையில் இவரே அதிபர் பதவியில் நீடிப்பதற்கான வழிவகை ஏற்பட்டுள்ளது. அடுத்து நடக்கும் 2 அதிபர் பதவிக்கான தேர்தலிலும் இதன்மூலம் இவர் போட்டியிடலாம்.



கடந்தாண்டு நடந்த அரசியலமைப்பு சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அவர் தொடர்ந்து பதவியில் நீடிப்பது தொடர்பாக கடந்தாண்டு ஜூலையில் ரஷ்யாவில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில், மக்கள் அமோக ஆதரவு அளித்தனர்.



கடந்த மாதம் இந்த புதிய மசோதாவுக்கு நாடாளுமன்ற  உறுப்பினர்களும் ஒப்புதல் அளித்தனர். இதேபோல், மற்றொரு கம்யூனிஸ்ட் நாடான சீனாவிலும், அதன் அதிபர் ஜி ஜின்பிங்கே வாழ்நாள் முழுவதும் அதிபர் பதவியில் நீடிப்பதற்கான சட்டம் இயற்றப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep28

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்தவர் 23 வயதான சீ

Sep22

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உச்சத்துக்கு வந்த சமய

Jul17

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளை அடக்கு

Aug31

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில

Jun01

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை தடுக்க புதிய ச

Feb25

தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடாரில் நீண்ட காலமா

Dec28

தன்னை விமர்சித்து கட்டுரை எழுதிய பெண் நிருபரை, அமெரிக

Mar15

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் உக்ரைன் மீதான போர்

Mar02

உக்ரைன் பாதுகாப்பு துறையானது போர் தாக்குதலில் காயமடை

May28