புதுச்சேரி கடலூர் சாலையில், நீதிமன்றம் எதிரே உள்ள AFT திடலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரசார பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கியது. பிரதமர் மோடி பிரசாரம் செய்து பேசுகிறார்.
கூட்டணிக் கட்சிகளான என்ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, பாஜக மாநில தலைவர் சாமிநாதன், முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், பாஜக பொதுச்செயலாளர் செல்வம், பாஜக மேலிடப் பொறுப்பாளர்கள் நிர்மல்குமார் சுரானா, மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், புதுச்சேரி அதிமுக மாநிலச் செயலாளர்கள் ஓம்சக்தி சேகர், அன்பழகன் மற்றும் 30 தொகுதி வேட்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.