வாழ்வாதாரத்தைக் கொண்டு நடத்துவதில் கடும் சிரமங்களை எதிர்கொள்ளும் மக்களுக்கு சலுகைகளை வழங்குமாறு எதிர்க்கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், எதிர்வரும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக அத்தியாவசிய பொருள்களின் விலையை அரசாங்கம் குறைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.