More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • பா.ஜனதா, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரசாரம்!
பா.ஜனதா, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரசாரம்!
Mar 30
பா.ஜனதா, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று பிரசாரம்!

தாராபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி பா.ஜனதா, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.



தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதை தொடர்ந்து பல்வேறு கட்சிகளும் தங்களது பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளன. இன்னும் வாக்குப்பதிவுக்கு 6 நாட்களே உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.



இதன் காரணமாக மாநில கட்சி தலைவர்கள் முதல் தேசிய கட்சி தலைவர்கள் வரை தமிழக தேர்தல் களத்தில் தங்களது கட்சியின் வெற்றிக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சாா்பில் தமிழக பா.ஜனதா தலைவா் எல்.முருகன் வேட்பாளராக போட்டியிடுகிறாா். அவரை ஆதாித்து கூட்டணி கட்சி தலைவர்கள், மத்திய மந்திரிகள், நடிகர்கள், நடிகைகள் பிரசாரம் மேற்கொண்டனர்.



இந்தநிலையில் பா.ஜனதா வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து பிரசாரம் செய்ய பிரதமர் மோடி இன்று (செவ்வாய்க்கிழமை) தாராபுரத்தில் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். இந்த பிரசார கூட்டத்தில் பிரதமருடன், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று பேசுகிறார்கள். மேலும், இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களும் பங்கேற்கிறார்கள்.



நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 10.15 மணிக்கு கோவை விமானநிலையத்திற்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து கேரள மாநிலம் பாலக்காட்டில் நடக்கும் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க ஹெலிகாப்டர் மூலம் செல்கிறார்.



அதன்பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதியம் 12.40 மணிக்கு தாராபுரத்திற்கு வருகிறார். அங்கு அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட மேடைக்கு 12.50 மணிக்கு வருகிறார். அதனை தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார். 1.40 மணிக்கு பிரசாரத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி கோவை விமானநிலையத்திற்கு செல்கிறார்.



பிரதமர் மோடியின் வருகையையொட்டி தாராபுரம் முழுவதும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar13

சாத்தூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர

Dec30

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, ஸ்டார் ஓட்டல்கள், ரி

Jan03

பீகார் அமைச்சர்கள் அனைவரும் தங்களது சொத்து விவரங்களை

Mar31

வாசுதேவநல்லூர் தொகுதியைப் பொதுத்தொகுதியாக அறிவிக்கக

Jan27

டெல்லியில் விவசாயிகளின் டராக்டர் பேரணியில் நிகழ்ந்த

Mar04

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நாடு முக்கிய கட்டத

Mar09

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழ

Mar05

கேரளாவில் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் யானை பாகன் மீ

Jul16

நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பொதுப்ப

Mar16

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்ட

Jan22

கேரளாவில் லட்சக்கணக்கில் மதிப்பிலான லொட்டரி சீட்டுக

Oct24

புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து மக்கள் தீபாவளியை உ

Aug10

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி.யுமா

Sep26

தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் மாநகராட்சி

Mar26

ராஜஸ்தானின் கங்காநகர் மாவட்டத்தில் நேற்று பகலில் ராண