தாய்வானில் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில், ஹூவாலியன் அருகே உள்ள ஒரு சுரங்கப்பாதையை நெருங்கியபோது விபத்தில் சிக்கியதில் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
350 பயணிகளுடன் ரயில் சென்றுகொண்டிருந்த ரயில் சுரங்கப்பாதை கடக்க வேகமாக பயணித்து கொண்டிருந்தபோது லொறி ஒன்றின் மீது ரயில் மோதியதாக கூறப்படுகிறது. மோதிய வேகத்தில் தடம் புரண்ட ரயில், சுரங்கப்பாதையின் சுவர்களில் மோதியது. இந்த பயங்கர விபத்தில் ரயிலில் பயணம் செய்த 36 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. மேலும் 72 பேர் காயம் அடைந்தனர்
இதனால் ரயில் பெட்டிகள் கடுமையாக சேதமடைந்தன. உள்ளே இருந்த பயணிகள் உடல் உறுப்புகள் சிதைந்த நிலையில் கூக்குரலிட்டனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெறுகிறது.
தடம்புரண்ட ரயிலுக்கு அருகில் லொறியின் சிதைந்த பாகங்கள் கிடந்தன. சரியாக நிறுத்தப்பட்டாதிருந்த லொறி சரிந்து தண்டவாளத்தில் விழுந்திருப்பதாகவும், அந்த லாரி மீது மோதியதால் ரயில் தடம்புரண்டிருக்கலாம் எனவும் ரயில்வே நிர்வாகம் கூறி உள்ளது.