More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • தூரநோக்கோடும் செயற்பட்டவர் இராயப்பு யோசப்-ஸ்ரீகாந்தா!
தூரநோக்கோடும் செயற்பட்டவர் இராயப்பு யோசப்-ஸ்ரீகாந்தா!
Apr 02
தூரநோக்கோடும் செயற்பட்டவர் இராயப்பு யோசப்-ஸ்ரீகாந்தா!

இலங்கைத் தீவில் எங்கள் தமிழ் இனத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் மிகவும்

நெருக்கடி நிறைந்த காலக்கட்டத்தில் தனது ஆத்மீகப் பயணத்தின் நன்கறியப்பட்ட

குறிக்கோளுடன் தமிழ்த் தேசிய அபிலாசைகளையும் இணைத்தபடி துணிச்சலோடும்

தூரநோக்கோடும் செயற்பட்ட உன்னத மனிதராக உயர்ந்து நின்றவர் மறைந்த

இராயப்பு ஜோசப் ஆண்டகை என சட்டத்தரணியும் தமிழ் தேசிய கட்சியின் தலைவருமான ந.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.



மேலும் தனது ஊடக அறிக்கையில்…



அந்த மா மனிதருக்கு தலை சாய்த்து அஞ்சலி செலுத்த நாம் அனைவரும் கடமை கொண்டுள்ளோம். அடிமைப்படுத்தப்பட்டிருந்த இந்திய தேசத்தில் சுவாமி விவேகானந்தர் ஓர் வரலாற்றுத் தேவையாக முன்னெழுந்து நிமிர்ந்து நின்றதைப் போலவே இலங்கைத் தமிழ்த் தேசத்தில் இன்னொரு விதத்தில் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் வரலாற்று வகிபாகம் அமைத்திருந்ததை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது.



தமிழ் இனத்தின் அரசியல் ஒற்றுமையை பலவீனப்படுத்திட பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்னெடுக்கப்பட்டு மீண்டும் மீண்டும் தோற்கடிக்கப்பட்டு வந்திருக்கும் மத பேதம் என்பது நிரந்தரமாக துடைத்தெறியப்படுவதை சாதிப்பதும் தோல்விகளைக் கண்ட கடந்த காலத்தின் தொடர் விளைவுகளாக காட்சி தரும் சராசரி

அரசியல் நடவடிக்கைகளுக்கு அப்பால் பரந்ததும் – பலமானதுமான ஓர் தேசிய விடுதலை இயக்கத்தை ஜனநாயக கோட்பாடுகளின் அடிப்படையில் தொலை நோக்குடன் கட்டி எழுப்பி ஒளிமயமானதோர் எதிர்காலத்தை எம் சந்ததிகளுக்கு உறுதிப்படுத்திட ஒற்றுமையாக செயற்படுவதுமே பிரிந்து சென்றுவிட்ட ஆண்டகைக்கு எமது தேசம் செலுத்த வேண்டிய உரியதோர் அஞ்சலியாகும்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar09

நாட்டில் அந்நிய செலாவணி குறைவடைதல், டொலர்களுக்கான தட

Mar11

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான நிதிக் கோரிக்கை கடித

Feb02

இலங்கையின் சுதந்திர தினமான  எதிர்வரும் நான்காம் திக

Mar05

  நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடி மற்

Jul15

அரசியல் கட்சிகளின் தேவைக்கேற்ப, அவர்களின் வழிகாட்டலு

Jan15

அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்

Apr02

குழந்தைகள் மத்தியில் இன்புளுவன்சா A மற்றும் B ஆகிய இரண்

May22

வெளியுறவு அமைச்சின் புதிய செயலாளராக அருணி விஜேவர்த்த

Mar10

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத

Oct24

முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகர

Aug10

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் கலந்துரையாடியதைத் தொ

Oct02

இலங்கை மக்களை வதைக்கும் கொடிய பயங்கரவாதத் தடைச் சட்டத

Oct04

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான நியூசிலாந்து தூதுவர் மை

Feb04

மத்திய மலை நாட்டிலுள்ள விக்டோரியா உட்பட பல முக்கிய நீ

May03

விக்ரம் படத்தின் ட்ரைலர் அறிவிப்பு

உலகநாயகன் கமல