More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • காவல்துறையினர் தாக்கியதால் கணவன் உயிரிழந்ததாக மனைவி குற்றச்சாட்டு!!!
காவல்துறையினர் தாக்கியதால் கணவன் உயிரிழந்ததாக மனைவி குற்றச்சாட்டு!!!
Apr 01
காவல்துறையினர் தாக்கியதால் கணவன் உயிரிழந்ததாக மனைவி குற்றச்சாட்டு!!!

களுபோவில-பாடசாலை வீதியை சேர்ந்த நபர் ஒருவரை காவல்துறையினர் கஞ்சாவுடன் கடந்த 18ஆம் திகதி இரத்மலானை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.



சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர் பிணையில் விடுதலை செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



எனினும்,பிணையில் விடுதலையான குறித்த நபரை காவல்துறையினர் தாக்கியதாக அவரது மனைவி தெரிவித்தார்.



சம்பவத்தில் தாக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இதன்பின்னர் வைத்தியசாலையில் இவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகளை அடுத்து அவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.



சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இவர் திடீர் உடல்நலக்குறைவால் நேற்று மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.



வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை இவர் திடீரென உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை நாளை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.



இவரின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன்,சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க உள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct13

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோள விதைக

Jun25

எமது பூர்வீகம் இல்லாது ஒழிக்கப்படும் சூழ்நிலை இந்த நா

Jun19

வடக்கு மாகாண சபை நிறைவேற்றிய சுகாதார நியதிச் சட்டத்து

Jan27

லங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ் இனங்காணப்பட்டுள்ளதா

Jan29

பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு முதுகு பகுதியில் ஏற்பட்

Aug24

நாடு முடக்கப்பட்டிருப்பதுபோல் தெரியவில்லை என ஐக்கி

Feb02

மருத்துவ பீட மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்

Aug28

கொழும்பு முழுவதும் நூற்றுக்கு நூறு வீதம் கொரோனா வைரஸி

Jun02