More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • திருநங்கையருக்கு அடுக்குமாடி குடியிருப்பு அரசு வேலைகளில் முன்னுரிமை!
திருநங்கையருக்கு அடுக்குமாடி குடியிருப்பு அரசு வேலைகளில் முன்னுரிமை!
Mar 25
திருநங்கையருக்கு அடுக்குமாடி குடியிருப்பு அரசு வேலைகளில் முன்னுரிமை!

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. விசிகவுக்கு தேர்தல் ஆணையம் பானை சின்னம் ஒதுக்கியுள்ள நிலையில் தீவிர பரப்புரையில் திருமாவளவன் ஈடுபட்டு வருகிறார். இந்த சூழலில் இன்று விசிக தேர்தல் அறிக்கையை விழுப்புரத்தில் வெளியிட்டார் திருமாவளவன். அதில் உள்ள சிறப்பு அம்சங்களை காணலாம்.



*தமிழ் நாட்டில் நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீடு முறை பாதுகாக்கப்படும்.



*கல்வித்துறையை பொதுப பட்டியலில் இருந்து விடுவித்து மாநில அதிகாரிகளுக்கான பட்டியலில் இணைக்க வேண்டும்



*தமிழ் வழி மழலையர் வகுப்புகளை கட்டாயமாக்க வேண்டும்



*மருத்துவம் ,பொறியியல் ,சட்டம், உயர்கல்வி படிப்புகள் தமிழ் வழியில் வழங்கப்படும்



*மாநில அரசின் கடன் சுமைகளை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வலியுறுத்தல்



*தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமையை நிலைநாட்டும் வகையில் சிறப்பு சட்டம் இயற்றப்பட வேண்டும்



*ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை செய்ய வலியுறுத்தல்



*புதிய வேளாண் திட்டங்களை தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவது தடுக்க போராட்டம் தொடரும்



*வேளாண்மையை மேம்படுத்த தனி வரவுசெலவுத்திட்டம்



*100 நாள் வேலை வாய்ப்பை வேளாண்மைக்கும், சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்திற்கும் நீட்டிப்பு செய்து 200 நாளாக உயர்த்தவும்



*அனைத்து வகுப்புகளிலும் மாணவர்களுக்கு விவசாய பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும்



*மின் உற்பத்தி திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு, தமிழகத்தை மின் உபரி மாநிலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்



*இடஒதுக்கீடு முறை பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிடச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.



*சாதி மறுப்பு திருமணம் புரிந்தோருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை; தம்பதியனரைப் பாதுகாக்க தனி காவல் பிரிவு உருவாக்க வலியுறுத்துவோம்.



*தமிழ்ப் பெயரில்லாத திரைப்படங்களுக்கு இரட்டிப்பு வரி விதிக்க நடவடிக்கை எடுப்போம்.



*திருநங்கையருக்கு கல்வி – வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.



*பட்டியலின இடஒதுக்கீட்டை 2011 மக்கள்தொகை அடிப்படையில் 21% ஆக உயர்த்த வலியுறுத்தப்படும்



*பெண்களுக்கு 33 விழுக்காடு அமல்படுத்தவும் பின்னர் அதை 50 விழுக்காடாக உயர்த்திடவும் நடவடிக்கை எடுக்கப்படும்.



*மீனவ மக்கள் மீன் பிடி தொழிலின் போது இறந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb24

 உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு தாயகம் அழைத

Feb24

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே

Jul15

சேலத்தை சேர்ந்த கோவிந்தராஜ், டாக்டர் ராஜசேகர், நாமக்க

Apr18

இந்தியா முழுவதும் கொரோனாவின் 2-வது அலை மின்னல் வேகத்தி

Apr19

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் தருமபுரம் ஆதின

May18

கேரள மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ம்

Jan28

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண

Oct07

1, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் அங்கீகாரம் இல்லாத

Feb05

நாட்டையும் அதன் ஒருமைப்பாட்டையும் மதிப்பதாக ஒவ்வொரு

Feb15

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு மத

Aug26