More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ராணுவம் இரவு நேரத்தில் வீடு புகுந்து கைது செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது!
ராணுவம் இரவு நேரத்தில்  வீடு புகுந்து கைது செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது!
Mar 25
ராணுவம் இரவு நேரத்தில் வீடு புகுந்து கைது செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது!

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அதேவேளையில் இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்கு ராணுவம் அடக்குமுறையைக் கையாண்டு வருகிறது. ஆட்சி கவிழ்ப்பு நடந்த பிப்ரவரி 1 முதல் இப்போது வரை 260-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த நாட்டின் சிவில் உரிமைகள் குழு கூறுகிறது.



பகலில் போராட்டக்காரர்களை விரட்டியடிக்கும் ராணுவம் இரவு நேரத்தில் அவர்களை வீடு புகுந்து கைது செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறது.



அந்தவகையில் நேற்றுமுன்தினம் இரவு மண்டலே நகரில் உள்ள வீடுகளுக்குள் ராணுவ வீரர்கள் அதிரடியாக நுழைந்து போராட்டக்காரர்களை கைது செய்தனர். அப்போது மவுங் கோ ஹாஷின் பா என்பவரை கைது செய்ய ராணுவ வீரர்கள் அவரது வீட்டுக்குள் நுழைந்தனர். அப்போது மவுங் கோ ஹாஷின் பாவின் 7வயது மகள் கின் மோ சிட் ராணுவ வீரர்களைக் கண்டு பயந்து தனது தந்தையை நோக்கி ஓடினாள். அப்போது ராணுவ வீரர்கள் திடீரென துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது. இதில் சிறுமி கின் மோ சிட்டின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தாள்.



7 வயது சிறுமி ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இதுகுறித்து ராணுவம் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதேசமயம் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட 628 பேரை நேற்று ராணுவம் விடுதலை செய்தது. இவர்களில் பெரும்பாலானவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் ஆவர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr15

தனது கணவரும் இளவரசருமான பிலிப் இறந்ததை தொடர்ந்து, இங்

Dec29

அமெரிக்காவில் 2,600 விமான சேவையை தனியார் நிறுவனம் ரத்து ச

Sep09

ரஷ்யாவில் பேரிடர் பயிற்சில் அதனை படம்பிடித்த புகைப்ப

Jul07

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலால் ஊரடங்கு

Sep19

ஆப்கானிஸ்தானில் நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட ந

Mar25

உக்ரைனுடனான போரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இர

Aug26

ஆப்கானிஸ்தானில் உள்ள தமது பிரஜைகளுக்கு, அமெரிக்காவும

Mar22

உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷிய ராணுவம், பொது மக

May23

மலேசியாவை இன்னொரு இலங்கையாக மாற்ற வேண்டாம் என்று எச்ச

Mar12

நான் உக்ரைனின் அதிபர். 2 குழந்தைகளுக்கு தந்தையாக இருக்

Jul25

ஆப்கானிஸ்தானில் இரு பகுதிகளில் ராணுவம் நடத்திய வான்வ

Feb02

தென்னாபிரிக்க கொரோனா வைரஸ் (கொவிட்-19) மாறுபாடு தொற்றை க

Jan02

கடந்த ஆண்டில் 70 ஏவுகணை சோதனைகள் நடத்திய வடகொரியா  2023ம

Sep23

ஈரானில் பல ஆண்டுகளில் காணாத மிக மோசமாக உருவெடுத்துள்ள

Mar21

ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி அரசுக்கும், ஹவுதி கிளர்ச்ச