மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ராணுவ இணை மந்திரி ஸ்ரீபாத நாயக் ஒரு கேள்விக்கு பதில் அளித்தார். அவர் கூறியதாவது
இந்திய விமானப்படையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட விமானிகள் எண்ணிக்கை 4 ஆயிரத்து 239 ஆகும். அவற்றில் தற்போது 3 ஆயிரத்து 834 பேர்தான் உள்ளனர். 405 விமானிகள் பற்றாக்குறை உள்ளது. விமானிகளுக்கு பயிற்சி அளிக்க 260 விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
‘‘ஹைபர்சானிக் விமானங்களை பயன்படுத்தி, சீனாவை உறுதியுடன் முறியடிக்க முடியுமா?’’ என்ற கேள்விக்கு ‘‘இது ரகசிய தகவல். சபையில் கூற முடியாது’’ என்று ஸ்ரீபாத நாயக் பதில் அளித்தார்.