More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • அவமானத்தைத் தேடி தராதே வாரிசு தலையில் குட்டு வைத்த குஷ்பு!
அவமானத்தைத் தேடி தராதே வாரிசு தலையில் குட்டு வைத்த குஷ்பு!
Mar 24
அவமானத்தைத் தேடி தராதே வாரிசு தலையில் குட்டு வைத்த குஷ்பு!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக -அதிமுக கட்சிகள் பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. அதிமுக கூட்டணி கட்சிகளை ஆதரித்து முதல்வர் பழனிசாமியும், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து ஸ்டாலின், திமுக எம்.பி.கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்த சூழலில் கார்த்தி சிதம்பரம் எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில், “மக்கள் நீதி மய்யம் ஒரு நிலையான கட்சி அல்ல. மக்களவை தேர்தலில் போட்டியிட்ட யாரும் இப்போது இல்லை; யாரும் தொகுதி பக்கம் கூட வரவில்லை. மக்கள் நீதி மையம் போன்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் தேர்தலின்போது மட்டும் ஒன்று கூடுவார்கள் அதன்பின் காணாமல் போவார்கள். கமல்ஹாசன், குஷ்பு போன்றவர்கள் தோல்விக்கு பிறகு தொகுதி பக்கமே செல்லமாட்டார்கள்” என்று கூறியிருந்தார்.



இதை கண்டு கடுப்பான பாஜக வேட்பாளர் குஷ்பு, நாங்கள் அப்பாவின் பெயரை வைத்து கொண்டு நாடகமாடவில்லை; எதையும் சாதிக்கவில்லை; வாழ்க்கையில் இந்த நிலைக்கு வரவில்லை. எங்களால் சொந்தமாக உழைக்க முடியும்; வெற்றிபெற முடியும். உங்கள் பாதுகாப்பின்மை சிந்தனையை உடைப்பதற்கு மன்னிக்கவும்.உங்களை சுற்றியிருப்பவர்கள் ஒரு குடும்ப பெயரை வைத்து செல்வாக்கை பார்ப்பவர்கள். நானும் கமல்ஹாசனும் சொந்தமாக உழைத்து முன்னேறியவர்கள். உழைப்பு, நேர்மை தான் எங்களை இதனை தூரத்திற்கு கொண்டு வந்துள்ளது.



உங்கள் பாதுகாப்பின்மை மனப்பான்மையைக் காட்டி உங்கள் தந்தைக்கு இன்னும் அவமானத்தைத் தேடித் தராதீர்கள்” என்றார். அத்துடன், ” நான் திமுக , காங்கிரஸ் கூட்டணியிலிருந்து தானாக வெளியே வரவில்லை. என் இருப்பு பலருக்கும் பயத்தை கொடுத்தது; அதற்கு நான் பொறுப்பல்ல: என்று குறிப்பிட்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb23

தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான குரூப் 2 மற்று

Mar27

கோவை மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்தவர் பாரதிராஜா இவர

Jan19

வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கும், விவசாய ச

Mar09

 கடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 51-வது வார்டில்

Jul25

சட்டவிரோதமான முறையில் இந்தியாவில் தங்கியிருந்த 38 இலங

Aug18

கேரள சுகாதாரத் துறை வெளியிட்ட செய்தியில், கடந்த 24 மணி ந

Jul31

டெல்லி செங்கோட்டையில் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி பிரதமர் ந

Jan21

கடந்த கால பேச்சுவார்த்தைகளில் நடந்ததை ஒதுக்கி வைத்து

Oct09

திமுக தலைவராக தேர்வான மு.க.ஸ்டாலினுக்கு திமுக நிர்வாக

Apr04

அசாம் மாநிலத்தில் இறுதிக்கட்ட சட்டசபை தேர்தல் ஏப்ரல்

Jun25

மேற்கு வங்காளத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலு

Apr03

மணப்பாறை சட்டமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் கிருஷ்ணக

Sep22

தருமபுரி நகரில் உள்ள உணவகங்களில் திடீர் ஆய்வில் ஈடுபட

Jul06

இந்தியாவில் பலரும் யூடியூப் சேனலில் தனியாகக் கணக்கு த

Aug23