ஆந்திராவில் நடந்த சாலை விபத்தில் 5 பெண்கள் உட்பட 8 தமிழர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சென்னையைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். நெல்லூர் அருகே புஜ்ஜிரெட்டிப்பாளையத்தில் லாரி மீது வேன் மோதியதில் 5 பெண்கள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர் . விபத்தில் படுகாயமடைந்த ஏழு பேர் நெல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
