More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • வானதி சீனிவாசனுடன் விவாதிக்க தயாரா கமலுக்கு சவால் விட்ட ஸ்மிருதி இரானி!
வானதி சீனிவாசனுடன் விவாதிக்க தயாரா கமலுக்கு சவால் விட்ட ஸ்மிருதி இரானி!
Mar 27
வானதி சீனிவாசனுடன் விவாதிக்க தயாரா கமலுக்கு சவால் விட்ட ஸ்மிருதி இரானி!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான விஐபி தொகுதிகளுள் ஒன்று கோவை தெற்கு. இங்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசனும் பாஜக சார்பில் வானதி சீனிவாசனும் போட்டியிடுகிறார்கள். திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமாரும் இங்கு போட்டியிடுகிறார். கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில் பார்த்தல் இந்த தொகுதி மக்கள் நீதி மய்யம் மற்றும் பாஜகவுக்கு இடையே இழுபறியாகத் தான் இருக்குமென தெரிகிறது.



அதனால், வானதி சீனிவாசன் அதிரடியாக களமிறங்கியிருக்கிறார். பாஜகவின் நட்சத்திர வேட்பாளர்களை வரவழைத்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், வானதி சீனிவாசனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கோவைக்கு வந்திருந்தார். பெண்கள் சிலருடன் சேர்ந்து ஸ்கூட்டியில் ஊர்வலமாக சென்று வானதி வாக்கு சேகரித்தார்.



பிரச்சாரத்தின் போது பேசிய ஸ்மிருதி இரானி, செல்வம் தாமரையில் அமர்ந்து தான் வரும் டார்ச் லைட்டில் வராது. புண்ணியம் செய்தால் வாழ்க்கையில் செல்வம் வரும். அந்த செல்வம் தாமரையில் அமர்ந்து தான் வரும் என மக்கள் நீதி மய்யத்தை விமர்சித்தார். மேலும், வளர்ச்சித் திட்டங்களின் பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் பற்றி வானதி சீனிவாசனுடன் விவாதிக்க தயாரா? என கமல்ஹாசனுக்கு சவால் விட்டார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb04

சட்டப்பேரவையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை

Aug22

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அற

Jun07

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக அமைக்கப்பட

Oct02

தேசப்பிதா மகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாள் விழா இன

Dec28

டெல்லியில் கொரோனா எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், ச

Jul17

கோவையில் இருந்து திருப்பூருக்கு சென்ற அரசுப்பேருந்த

Dec19

இந்திய சமூக ஜனநாயக கட்சியின் (எஸ்டிபிஐ) மாநில செயலாளர்

Oct13