More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 20 பேர் சொந்த ஊர் திரும்பினர்!
கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 20 பேர் சொந்த ஊர் திரும்பினர்!
Mar 27
கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 20 பேர் சொந்த ஊர் திரும்பினர்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம், நாகை மீனவர்கள் அவர்களது படகுகளுடன் விடுவிக்கப்பட்டனர். நேற்று மாலை 20 மீனவர்கள் ராமேசுவரம் வந்தடைந்தனர். இலங்கை கோர்ட்டு உத்தரவால் காரைக்கால் மீனவர்கள் ஊர்திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டு்ள்ளது.



ராமேசுவரம், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய பகுதிகளில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு 5 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 54 பேர், எல்லை தாண்டிச் சென்று மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்களது 5 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.



இதில் ராமேசுவரம் மீனவர்கள் 20 பேர், இலங்கை மன்னாரில் உள்ள கடற்படை முகாமிலும் நாகப்பட்டினத்தை சேர்ந்த 20 மீனவர்கள் திரிகோணமலையில் உள்ள கடற்படை முகாமிலும், காரைக்காலைச் சேர்ந்த 14 மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.



ஒரே நாளில் தமிழக மீனவர்கள் 54 பேர் கைது செய்யப்பட்டது தமிழக மீனவர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தமிழக மீனவர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு, இதுகுறித்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.



அதை தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரத்தை சேர்ந்த 20 மீனவர்கள், நாகப்பட்டினத்தை சேர்ந்த 20 மீனவர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டு உள்ளனர். அவர்களது படகுகளும் விடுவிக்கப்பட்டன.



காரைக்காலை சேர்ந்த 14 மீனவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. அவர்களை வருகிற 8-ந் தேதி வரையிலும் தனிமைப்படுத்தி தங்க வைக்க ஊர்க்காவல் துறை கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் அவர்கள் ஊர் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.



விடுவிக்கப்பட்ட மீனவர்கள் படகுகளுடன் சொந்த ஊர் திரும்பவும் இலங்கை அரசு உடனடி நடவடிக்கை எடுத்தது.



அதன்படி ராமேசுவரம் மீனவர்கள் 20 பேர் தங்கள் படகுகளில் அங்கிருந்து புறப்பட்டு, நேற்று மாலை சொந்த ஊர் வந்தனர். இதே போல் இலங்கையில் இருந்து நாகை மீனவர்களும் தங்கள் படகில் புறப்பட்டனர்.



இதுகுறித்து பாம்பனில் உள்ள நிரபராதி மீனவர்கள் விடுதலைக்கான கூட்டமைப்பின் தலைவர் அருளானந்தம் கூறும்போது, இந்திய அரசு எடுத்த நடவடிக்கையை தொடர்ந்து இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 54 மீனவர்களில் ராமேசுவரம் மற்றும் நாகப்பட்டினத்தை சேர்ந்த 4 படகுகள், 40 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். அரசின் இந்த நடவடிக்கை மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுபோல் காரைக்காலை சேர்ந்த ஒரு படகு மற்றும் 14 மீனவர்களை விடுதலை செய்வதற்கும் அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar20

பூர்வீகச் சொத்துகளை விற்று பாகம் பிரித்துத் தராமல், ம

Aug23
Mar13

பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளக் கட்டுமான பொருட்களை ஏற்

Jul04

டெல்லியில் முதல் மந்திரி கெஜ்ரிவால் தலைமையிலான அரசு வ

Mar27

சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக

Sep02