More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • வெளிநாடு பயணம்- பிரதமர் மோடிக்கு வங்கதேசத்தில் உற்சாக வரவேற்பு
வெளிநாடு பயணம்- பிரதமர் மோடிக்கு வங்கதேசத்தில் உற்சாக வரவேற்பு
Mar 26
வெளிநாடு பயணம்- பிரதமர் மோடிக்கு வங்கதேசத்தில் உற்சாக வரவேற்பு

வங்கதேசம் நாடு கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது ஆகும். இந்த பிரிவினையை இந்தியா முன் நின்று நடத்தியது. இதன் காரணமாக இந்தியா- வங்கதேசம் இடையே நல்ல நட்புறவு நீடித்து வருகிறது.



வங்கதேசம் சுதந்திரம் பெற்று இந்த ஆண்டு பொன்விழா கொண்டாடுகிறது. அதை தேசிய தினமாக வங்கதேசம் கொண்டாடுகிறது. இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்தார்.



அந்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார். இன்று (வெள்ளிக்கிழமை) காலை அவர் வங்கதேசத்துக்கு புறபட்டுச் சென்றார். கொரோனா காரணமாக கடந்த 15 மாதங்களாக பிரதமர் மோடி வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்து இருந்தார்.



15 மாதங்களுக்கு பிறகு முதன்முறையாக வங்கதேசத்துக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.



வங்கதேச தலைநகர் டாக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பிரதமர் ஷேக் ஹசீனா விமான நிலையத்திற்கு சென்று பிரதமர் மோடியை வரவேற்றார். பின்னர் அங்கு வீரர்களின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. 



இன்றும், நாளையும் 2 நாட்கள் வங்கதேசத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.



இன்று வங்கதேசத்தின் தேசியதின விழா நடக்கிறது. அதோடு ஷேக் முஜிபூர் ரகுமானின் 100-வது ஆண்டு பிறந்தநாள் விழா கொண் டாட்டமும் தொடங்கியது. இந்த விழாக்களில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.



டாக்காவில் துங்கிபாரா பகுதியில் உள்ள முஜிபூர் ரகுமானின் சமாதிக்கு சென்று மரியாதை செலுத்துகிறார்.



வங்கதேசத்தில் புகழ் பெற்ற காளிகோவில் உள்ளது. 51 சக்தி பீடங்களில் ஒன்றான அந்த கோவிலுக்கு நாளை (சனிக்கிழமை) சென்று பிரதமர் மோடி வழிபட உள்ளார். அங்கு பொது மக்களையும் சந்தித்து பேசுகிறார்.



வங்கதேச ஜனாதிபதி அப்துல் ஹமீது, பிரதமர் ஷேக் ஹசீனா ஆகியோரையும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். அப்போது இந்தியா- வங்கதேசம் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.



இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோடி வருகையையொட்டி அவர் செல்லும் இடங்களில் எல்லாம் சிறப்பு ஏற்பாடுகளை வங்கதேச அரசு செய்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan23

கடந்த மாதம் பிரித்தானிய அரசாங்கத்தின் கடன் 34.1 பில்லிய

Mar15

இலங்கைத் தீவில் அனைவரது மனித உரிமைகளும் உறுதிசெய்யப்

Aug22

மெக்சிகோ நாட்டை நேற்று கிரேஸ் சூறாவளி புயல் தாக்கியது

Sep30

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கல்வி நிலையமொன்ற

Oct06

ஜம்மு காஷ்மீரின் பண்டிபோரா மாவட்டத்தில் மருந்துக்கட

Oct24

ஈரான், கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் புதிய ஆளுநராக அ

Mar14

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு கடற்கரை பகுதிய

Mar10

இந்த நூற்றாண்டின் விதியை தீர்மானிக்க போகும் மிகப்பெர

Jan29

மேற்கு லண்டனில் தாயார் ஒருவர் தமது 5 வயது மகளை கழுத்தை

Feb04

சமீபத்திய ப்ளூம்பெர்க் கொவிட்-19 பின்னடைவு தரவரிசைப்ப

Dec26

சமாதானமான நாடு ஒன்றில் வாழக் கிடைத்தமையினால் கனேடிய ம

Apr22

ரஷியாவுடனான போரில் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ம

Aug10

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை

Jun06