More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • எனக்கு எதிராக சதி பண்ணிட்டாங்க கதறி அழுத அதிமுக வேட்பாளர்!
எனக்கு எதிராக சதி பண்ணிட்டாங்க கதறி அழுத அதிமுக வேட்பாளர்!
Mar 18
எனக்கு எதிராக சதி பண்ணிட்டாங்க கதறி அழுத அதிமுக வேட்பாளர்!

வேறு தொகுதியில் போட்டியிட வைத்தால் அதிமுக மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் கதறி அழுத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் அதாவது ஏப்ரல் 6ஆம் தேதியே சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. புதுச்சேரியில் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ், திமுக, விசிக ஆகியவை கூட்டணி அமைத்துள்ளன. இதில் காங்கிரஸ் 15, திமுக 13, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் பாஜக, அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதில் என்.ஆர்.காங்கிரஸ் 16, பாஜக 9 தொகுதிகளிலும், அதிமுக 5 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளது.



இந்நிலையில் புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் அதிமுக மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு உருளையன்பேட்டை தொகுதி ஒதுக்கப்பட்டது. நெல்லித்தோப்பு பகுதி என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் உள்ள பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஓம்சக்தி சேகர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய அவர், நெல்லித்தோப்பு தொகுதியில் 2 முறை வெற்றிபெற்றுள்ளேன். தற்போது ஒதுக்கப்பட்டுள்ள உருளையன்பேட்டை தொகுதியிலும் வெற்றிபெறுவேன். எனக்கு எதிராக சதி நடக்கிறது. நான் வெற்றிபெற கூடாது என்பதற்காகதான் தொகுதியை மாற்றி கொடுத்துள்ளனர். உண்மைக்கு கிடைத்த விலை இது. என்னை கட்சியை விட்டு அனுப்ப பார்க்கிறார்கள். எனக்காக உழைத்தவர்களை விட்டு செல்வது கஷ்டமாக உள்ளது” என்று கூறிக்கொண்டே கதறி அழுதார். இதைக்கண்ட அங்கிருத்தவர்கள் அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகருக்கு ஆறுதல் கூறினார்கள்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
May27

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல

Mar13

உக்ரைன் நாட்டின் மீதான ரஷியாவின் போர் நேற்று 17-வது நாள

Mar27

பிரதமர் நரேந்திர மோடி  2 நாள் பயணமாக நேற்று வங்காளதேச

Mar03

உக்ரைன் மீது போர் தொடுக்க விரும்பாத ரஷ்ய வீரர்கள் பலர

Feb04

கடுமையான உள்ளிருப்பு கட்டுப்பாடுகளுக்கு பெரும்பான்ம

Apr05

ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவ் ஏப்ரல் 5

Mar06

உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய ராணுவ ஹெலிகோப்டேரை அந்த நா

Jan20

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபத

Sep26

அட்லாண்டிக் கடலில் உருவான சக்தி வாய்ந்த ‘பியோனா’ ப

Jun23

கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் உள்ள மாமிச உணவுப்ப

May31

யுக்ரைனில் ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக போரிட்டதற்காக

Mar13

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹாரம் உள்பட

Nov06

உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும், ஐ.நா பாதுகாப்பு கவு

Mar10

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர

Aug05